ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு, 21 பேர் கவலைக்கிடம்
மத்திய உக்ரைன் நகரமான கிரிவி ரிஹ்-இல் உள்ள வணிக வளாகம் ஒன்றின்மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 06 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் பகல் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா Oleksandr Hanzha தெரிவித்துள்ளார்.
“ஒரு குழந்தை உட்பட இருபத்தொரு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.
தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெலன்ஸ்கி முற்றிலும் வஞ்சகமானது மற்றும் இழிவானது எனக் குறிப்பிட்டுள்ளார்.




