இலங்கை செய்தி

கண்ணிவெடி அகற்றல் பணியை துரிதப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை (Tourism) சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதுவாக, கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை (Tourism) சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதுவாக, கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் தலைமையில் இன்று (21.08.2026) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

” 2032ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடியற்ற நாடாக (Mine-free country) நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பாகும்.

போர்க் காலத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், குறிப்பாக முகமாலைப் பகுதியில் இன்னும் பெருமளவான கண்ணிவெடிகள் காணப்படுகின்றன.

அப்பகுதியில் ஒரு பகுதி முற்றாகச் சுத்திகரிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள தனியார் காணிகளிலும் கண்ணிவெடிகளை அகற்றி மக்களின் மீள்குடியேற்றத்துக்கும் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளையும் சுற்றுலாத்துறையையும் மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. எனவே, அவ்வாறான அபிவிருத்தி வலயங்களை அடையாளங்கண்டு, அவை கண்ணிவெடியற்ற பிரதேசங்கள் என உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

மேலும், நீர்ப்பாசனக் குளங்களின் திருத்தப் பணிகளுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்குளங்களைச் சூழவுள்ள வனப்பகுதிகளில் அமைந்திருக்கும் நீரேந்துப் பகுதிகளிலும் (Catchment areas) கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

அப்பிரதேசங்கள் இலங்கை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுவதால், அங்கு கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வனப் பாதுகாப்பாளர் நாயகம் அவர்களுடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்” வலியுறுத்தினார்.

இதன்போது, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (US Dollars) செலவிடப்பட்டுள்ளதாகத் தேசிய கண்ணிவெடிச் செயற்பாட்டு மையத்தின் (National Mine Action Center) பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும், கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின் போது 2002ஆம் ஆண்டு 252 பணியாளர்கள் காயமடைந்ததாகவும், அதன் பின்னர் 2002 முதல் 2025 வரையான நீண்ட காலப்பகுதியில் 2 பணியாளர்கள் மட்டுமே காயமடைந்துள்ளதாகவும், இது கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டின் பாதுகாப்பான மற்றும் முன்னேற்றகரமான நிலைமையைக் காட்டுகிறது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை