இலங்கை

புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

  • October 7, 2023
  • 0 Comments

உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், இன்று (07.10) கடமையில் ஈடுபடவுள்ள அனைத்து உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் அவர் விசேட அறிவித்தலை விடுத்துள்ளார். இதன்படி நியமிக்கப்பட்ட பணிநிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க சிரமப்படும் அதிகாரிகள் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

திருகோணமலையில் தனிநபருக்கு சொந்தமான காணியில் விகாரை அமைக்க முடியுமா..! பிரகாஷ் குகதாஸ் கேள்வி

திருகோணமலை- பொரலுகந்த தனிநபருக்கு சொந்தமான காணியில் விகாரை அமைக்க முடியுமா என சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச் செயலாளர் குகதாஸ் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விகாரை தொடர்பில் இன்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில் ” 01.அரச காணியினை குத்தகைக்கு வழங்குவது சம்பந்தமாக குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட வில்லை. 02. பிரதேச செயலாளர் – பிரதேசசபை – U.D.A – Forost Department – சுற்றாடல் அதிகாரசபை – […]

இலங்கை

திடீர் வானிலை மாற்றத்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: மஹிந்த அமரவீர

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் உணவு தட்டுப்பாடு அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் அடை மழையினால் அறுவடைக்கு வரவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் […]

இலங்கை

இலங்கையில் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேசம் விசாரணை நடத்த முடியாது!

  • October 7, 2023
  • 0 Comments

இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த நாட்டில் இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஞானார்த்த பிரதிபய நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் “சுதந்திரமான, வெளிப்படையான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு தேவை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கை மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை

ஒருகொடவத்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து

ஒருகொடவத்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. விரைவாக செயற்பட்டு ஏழு தீயணைப்பு வாகனங்களின் ஊடாக தொழிற்சாலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது தீயினால் உயிர்சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், தொழிற்சாலை மற்றும் அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை

போலியான பெயர் பட்டியலை பயன்படுத்தி மருந்து இற்க்குமதி : குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை!

  • October 7, 2023
  • 0 Comments

போலியான பெயர்ப் பட்டியலைப் பயன்படுத்தி இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்தமைக்கு காரணமான நபர்களுக்குத் தேவையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதமை வருத்தமளிப்பதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் கலாநிதி அஜந்த ராஜகருணா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக நாட்டில் மருந்து பற்றாக்குறை பிரச்சினை நிலவிவருகிறது. தரமற்ற மருந்து இறக்குமதியால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை பிரதான காரணமாக சுட்டிக்காட்டி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது […]

இலங்கை

மன்னாரில் மீனவர் வலையில் சிக்கிய பாம்பு மீன்

மன்னாரில் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது. இன்றைய தினம் (7) மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த மீனவரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது. குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது. பெரும்பாலும் இவ்வகை மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது. அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும். ஆனாலும் இன்றைய தினம் […]

இலங்கை

மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்!

  • October 7, 2023
  • 0 Comments

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் ஆகியோர் தலைமையில் இன்று (07) இடம்பெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மூடப்படுமென மாத்தறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  

ஆசியா

உள்நாட்டு போர் எச்சரிக்கையை வெளியிட்டது இஸ்ரேல் இராணுவம்!

  • October 7, 2023
  • 0 Comments

இஸ்ரேல் இராணுவம் உள்நாட்டு போர் எச்சரிக்கையை இன்று (07.10) அறிவித்துள்ளது. காசாவில் இருந்து போராளிகள் ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசாவை இயக்கும் பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ், இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேலுக்கு எதிராக பொது கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. “உங்களிடம் துப்பாக்கி இருந்தால், அதை வெளியே எறியுங்கள். இதைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது – டிரக்குகள், கார்கள், கோடரிகளுடன் வெளியேறுங்கள், சிறந்த மற்றும் மிகவும் கௌரவமான வரலாறு […]

இலங்கை

தலங்கம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

  • October 7, 2023
  • 0 Comments

தலங்கமவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை STF) தெரிவித்துள்ளது. ஹன்வெல்லவில் இராணுவ அதிகாரிகளுடன் இடம்பெற்ற மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.