இலங்கை

இலங்கையில் வாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்த கோரிக்கை

இலங்கையில் வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த, பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பு – சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அதேநேரம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விபத்துகளில் ஆயிரத்து 733 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்