உலகம்

இஸ்ரேல் போர் பதற்றம் : விமான சேவை ரத்து- ஏர் இந்தியா அறிவிப்பு

இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நேற்று காலை நடத்திய தாக்குதலால் இஸ்ரேலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பல உயிரிழப்பும் ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருப்பதாக அறிவித்த இஸ்ரேல், “ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது” என எச்சரித்து போரை தீவிரமாக்கியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் நிலையை எடுத்திருக்கும் அதே சமயம் ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கின்றன. […]

இலங்கை

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 07 பேர் உயிரிழப்பு!

  • October 8, 2023
  • 0 Comments

தொடரும் சீரற்ற காநிலை காரணமாக  இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 13 மாவட்டங்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (08.10) காலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு மாத்தறை […]

இலங்கை

மூதூர் அறபா நகர் சந்தனவெட்டை மீள்குடியேற்றம் : மக்களுடன் எம்.எஸ் தௌபீக் முக்கிய சந்திப்பு..!

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறபா நகர் சந்தனவெட்டை மீள்குடியேற்றக் கிராம மக்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது இச்சந்திப்பு நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்றுள்ளது இச்சந்திப்பின்போது அப்பிரதேசத்தின் முக்கிய அடிப்படைத் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில விடயங்களுக்கு உடனடித் தீர்வும் காணப்படட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

இன, மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் – ரணில்!

  • October 8, 2023
  • 0 Comments

இன மற்றும் மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன, மத பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காமல் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அதற்கான விரைவான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். […]

பொழுதுபோக்கு

இந்த முறை BB – 7 வந்த ஏழரை இவர்தான்… வணிதா

  • October 8, 2023
  • 0 Comments

வனிதா 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார். பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை. தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து […]

இலங்கை

மட்டக்களப்பில் ஜனாதிபதி விடுததுள்ள வேண்டுகோள்!

இனிமேல் தனது புகைப்படங்களை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். இன்று (08) மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகயைில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார் மேலும், சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை பொறிப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ள ஜனாதிபதி கட்அவுட் மற்றும் அரசியல் கோசங்களில் இருந்து விலகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட்டாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் […]

மத்திய கிழக்கு

ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 2000 பேர் பலி!

  • October 8, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய வலுவான நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தலிபான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் இன்று (08.410) அறிவித்தார். இரண்டு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலத்த நிலநடுக்கங்களால் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் […]

இலங்கை

கைகளில் கோப்பைகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்த கால்நடை பண்ணையாளர்கள்!

  • October 8, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்த நிலையில் மட்டக்களப்பு சித்தாண்டியில் பண்ணையாளர்கள் கைகளில் கோப்பைகளை ஏந்தி போராட்டம் நடாத்தியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக மட்டகளப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதன்போது கடந்த 23 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் தனது குடும்பத்தினருடன், வீதிகளில் திரண்டு,  கைகளில் கோப்பைகளை ஏந்தி தமது நிலங்ளை தங்களுக்கு வழங்குமாறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ் […]

இலங்கை

கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்தை பார்வையிட்டு சென்ற பிக்குகளால் அச்சத்தில் மக்கள்!

  • October 8, 2023
  • 0 Comments

முஸ்லிம்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்திற்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளமை பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை நான் கேட்டுக் கொள்கிறேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் மஜீத்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் குரங்குபாஞ்சான் கிராமம் […]

இலங்கை

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களை தவிர்த்து நிகழ்வுக்கு சென்ற ஜனாதிபதி!

  • October 8, 2023
  • 0 Comments

மட்டக்களப்புக்கு நிகழ்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்லாமல் ஊர்வீதிகளுக்குள்ளால் பயணித்த சம்பவம் நேற்றைய (07.10) தினம் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில்விக்ரசிங்க நேற்றும் (07.10) இன்றும் (08.10)  இரு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.  மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்றுவருகின்றார். இந்த நிலையில் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 23நாட்களாக போராடிவருகின்றனர். இதனால் குறித்த வீதியூடாக பயணிக்காமல், […]