ஆசியா

சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 20 பிரம்படிகளும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. 18 வயதான முஹம்மது உசைர் அப்துல் ரஹ்மான் என்ற இளைஞர், குற்றத்தில் ஈடுபடும்போது முழுநேர தேசிய சேவையாளராக பணிபுரிந்துள்ளார்.

பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட இளையரை பாலியல் ரீதியாக பாதிக்கச் செய்த ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், பாலியல் குற்றங்கள் தொடர்பான மற்ற ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது, அனைவரும் மது போதையில் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியின் நண்பர் அஸ்ரி என்பவரின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்