இலங்கை

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் குறித்து ஆழ்ந்த கரிசணையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை!

  • October 8, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வன்முறையை உடனடியாக நிறுத்துமாறும், மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறும் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. “1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே வாழும் இரு நாடுகளின் சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு […]

இலங்கை

மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

  • October 8, 2023
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (09.10) மற்றும் நாளை மறுதினம் (10.10) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகளை  தென் மாகாண கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் வில்லி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

லியோ ரிலீஸ் திகதியில் மாற்றம்…

  • October 8, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் விஜய்யின் இந்த லியோ படத்திற்கு அதிகாலை காட்சி திரையிட அனுமதி கிடைக்கவில்லை. அதனால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், ஒரு நாளைக்கு முன்னதாகவே அதாவது அக்டோபர் 18ம் தேதியே லியோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக, அக்டோபர் 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் பிரிமியர் காட்சிகளாக திரையிடப்பட உள்ளன. தமிழகம் […]

ஆசியா

தாய்லாந்து விமான நிலையத்தில் உயிருடன் சிக்கிய 30 க்கும் அதிகமான விலங்குகள்

  • October 8, 2023
  • 0 Comments

தாய்லாந்திலிருந்து தைவானுக்கு 30க்கும் அதிகமான விலங்குகள் உயிருடன் கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விமான நிலைய ஊழியர் ஒருவர் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2 நீர்நாய்க் குட்டிகள், 28 ஆமைக் குஞ்சுகள், ஒருவகை அணில், ஆகிய விலங்குகள் தைப்பே விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் சில விமானத்தின் சரக்குப் பகுதியிலிருந்து தப்பியபோது விலங்குகள் கடத்தப்பட்டது புலப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது. மனிதத் தவற்றால் விலங்குகள் கடத்தப்பட்டது கண்டறியப்படவில்லை எனத் தாய்லந்தின் சுவர்ணபூமி விமான நிலையம் குறிப்பிட்டது. விலங்குகளைக் […]

இலங்கை

இலங்கையில் மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

  • October 8, 2023
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட, மத்துகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய பிரதேசங்களுக்கே இந்த மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை […]

ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தும் மூட்டைப்பூச்சி – அமெரிக்க நட்சத்திரத்தின் கருத்தால் சர்ச்சை

  • October 8, 2023
  • 0 Comments

பிரான்ஸின் தலைநகர் பரிசில் மூட்டைப்பூச்சி விவகாரம் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக, பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் Jimmy Fallon வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. The Tonight Show எனும் நிகழ்ச்சியில் தோன்றிய அவர், ஒரு கையில் பிரெஞ்சுப் பாண் மற்றைய கையில் வைன் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மூட்டைப்பூச்சி தொடர்பான பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார். பாடலில் பரிசில் மூட்டைப்பூச்சி கடி உள்தையும், உங்களையும் அது கடிக்கும் எனவும், நீங்கள் அங்கிருந்தால் அவதானமாக இருக்கவும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இளைஞர்கள் – சிறுவன் செய்த செயல்

  • October 8, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே பாரிய வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றது. ஜெர்மனியில் பெம்ஸ்ரைட் நகரத்தில் நிகழ்ந்த தாக்குதல் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள பெம்ஸ்ரைட் என்ற நகரத்தில் 2 உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமான 15 வயதுடைய சிறுவன் ஒருவர் 17 வயதுடைய இளைஞரான தன் உறவினரின் தலையின் போத்தல் ஒன்றினால் தாக்குதலை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 17 வயதுடைய இளைஞர் படுங்காயம் அடைந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் […]

பொழுதுபோக்கு

விஜய் அண்ணாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; லோகேஷ் அதிரடி

  • October 8, 2023
  • 0 Comments

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ம் திகதி வெளியானது. இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது. விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், லியோவில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நானே காரணம் என லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். விஜய் கெட்ட வார்த்தை பேசி நடிப்பது, இளைஞர்களையும் அவரது ரசிகர்களையும் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 80,000 வீடுகள் கட்டும் இலக்கு – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

  • October 8, 2023
  • 0 Comments

விக்டோரியா மாநிலத்தில் பல பாரிய கட்டுமான திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏனெனில், ஆண்டுக்கு 80,000 வீடுகள் கட்டும் இலக்கை எட்டுவதற்கு தற்போதுள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விக்டோரியா கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 333,000 ஆக இருந்தது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 21,000 குறைவு என பதிவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விக்டோரியா மாநில அரசும், திறமையான விசா திட்டத்தின் கீழ், […]

ஐரோப்பா

அயர்லாந்து விசா விண்ணப்பதாரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • October 8, 2023
  • 0 Comments

அயர்லாந்தின் இமிக்ரேஷன் சர்வீஸ் டெலிவரி (ISD) விசா வாடிக்கையாளர்கள் ஒன்லைனில் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது மோசடி செய்பவர்களிடம் இருந்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது. ஒரு அறிக்கை மூலம், அயர்லாந்தின் குடிவரவு சேவை வழங்கல் ஐரிஷ் விசா விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ AVATS இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரிஷ் விசா விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ AVATS இணையதளத்தில் மட்டுமே உருவாக்கி சமர்ப்பிக்க முடியும். வேறு ஏதேனும் இணையதளத்தில் விசா விண்ணப்பம் அல்லது அதனுடன் தொடர்புடைய பணம் […]