புலம்பெயர்தோரை இத்தாலிக்கு அனுப்ப திட்டமிடும் சுவீடன்
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, தற்போது சுவீடனும் புலம்பெயர்ந்தோரை இத்தாலிக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது.
மேலும் பல ஐரோப்பிய அரசாங்கங்கள், புலம்பெயர்ந்தவர்கள் மீளவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்து வருகின்றன.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடம் மற்றும் குடியேற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தின்படி, “நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற” உத்தேசித்துள்ளதாகவும், இத்தாலி உட்பட “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்” என்று எதிர்பார்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்பெயினும் பிரான்சும் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் நுழையும் முக்கிய இடங்களாக விளங்கும் மற்ற இரண்டு நாடுகளான இவை, புலம்பெயர்ந்தோரை அவர்கள் முதன்முதலில் நுழைந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளன.




