இலங்கை

மாத்தறையில் இரு வீட்டுப் பணிப்பெண்கள் படுகொலை: சந்தேக நபர் கைது

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றிய இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர், அந்த நேரத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டில் பணிப்பெண்கள் இருவர் இல்லாததை அவதானித்ததால், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அவர்களை தேடினர். அப்போது, அவர்கள் பயன்படுத்திய குளியலறையில் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த வீட்டை சோதனையிட்ட போது வீட்டினுள் இருந்த அலமாரியில் […]

இலங்கை

இலங்கையில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என அறிவிப்பு!

  • October 8, 2023
  • 0 Comments

இலங்கையில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர, அரச துறையில் எதிர்காலத்தில் எந்தவொரு வேலைக்கும் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரச சேவையானது தற்போது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவித்த அவர்,  உலகிலேயே அதிக அரச ஊழியர்களுக்கும் சனத்தொகைக்கும் இடையிலான விகிதத்தில் இலங்கையும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். “நாட்டில் 1.5 மில்லியன் பொது ஊழியர்கள் உள்ளனர், அதே நேரத்தில் நாட்டின் மக்கள் தொகை […]

பொழுதுபோக்கு

லியோவை விட தலைவர்171 படம் ஒருபடி மேலதான்… லோகேஷ் மாஸ்

  • October 8, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் தலைவர்171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார். லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஷஇந்தப் படம் சாதாரணமான கேமிராவில் படமாக்கப்பட்டு ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தான் இயக்கவுள்ள அடுத்தப்படமான தலைவர் 171 படத்தின் பல காட்சிகளை இந்த ஐமேக்ஸ் தொழில்நுட்ப கேமிராவை வைத்தே சூட் செய்ய […]

இலங்கை

மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக பலி

திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி இன்று (08) உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம்தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்றுவந்தவர் எனவும் தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் […]

இலங்கை

மட்டக்களப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் பலி!

  • October 8, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு நாவலடி தடாகத்தில் இன்று (08.10) ஆறு மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,  இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர்கள் ‘டிக்டோக்’ வீடியோ எடுப்பதற்காக நாவலடி தடாகத்தில் படகு சவாரி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 18 மற்றும் 19 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் மட்டக்களப்பு சீலாமணன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உலகம்

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய பிரித்தானிய பிரஜை பலி!

இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பிரிட்டன் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த கார்ப்ரல் நத்தனெல யங் என்ற 20 வயதுடைய ஒரு சிப்பாய் என்று யூத செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினர் அவருக்கு ஃபேஸ்புக்கில் அஞ்சலி செலுத்தினர், அவர்கள் “இதயம் உடைந்ததாக” பதிவிட்டுள்ளார். மேலும் இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை […]

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளுக்கு மின்னல் தாக்கத்திற்கான அம்பர் எச்சரிக்கை விடுப்பு!

  • October 8, 2023
  • 0 Comments

இலங்கையின் சில பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இலங்கை

அம்பலாங்கொட பகுதியில் இனங்காணப்பட்ட முதலையால் பீதியில் மக்கள்!

  • October 8, 2023
  • 0 Comments

அம்பலாங்கொட, மாதம்பை ஆற்றில் கடந்த இரு நாட்களாக முதலை ஒன்று தென்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 அடி கொண்ட முதலை இருப்பதாக தெரிவிக்கும் மக்கள், அச்சத்தின் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே சுமார் 10 அடி நீளம் கொண்ட இந்த முதலையை உரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன்,  இது குறித்து வனவிலங்கு திணைக்களத்துக்கும் தெரியப்படுத்திய போதும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி களநிலைவரம் : முதலிடத்தில் சீனா!

  • October 8, 2023
  • 0 Comments

ஆசிய ஒலிம்பிக் பேரவை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாட்டை இன்று (08.10) சீனாவின் ஹாங்சோ நகரில் நடத்தியுள்ளனர். 15 உலக சாதனைகள் மற்றும் 37 ஆசிய சாதனைகளுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னர் பதிவான 170 சாதனைகளை இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீரர்கள் முறியடித்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில், சீனா 201 […]

இலங்கை

தென் மாகாண பாடசாலைகளின் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் இரண்டாம் தவணைப்பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். . அத்துடன், குறித்த பாடசாலைகளுக்கான பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தென் மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.