ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தும் மூட்டைப்பூச்சி – அமெரிக்க நட்சத்திரத்தின் கருத்தால் சர்ச்சை

பிரான்ஸின் தலைநகர் பரிசில் மூட்டைப்பூச்சி விவகாரம் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

இது தொடர்பாக, பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் Jimmy Fallon வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The Tonight Show எனும் நிகழ்ச்சியில் தோன்றிய அவர், ஒரு கையில் பிரெஞ்சுப் பாண் மற்றைய கையில் வைன் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மூட்டைப்பூச்சி தொடர்பான பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.

பாடலில் பரிசில் மூட்டைப்பூச்சி கடி உள்தையும், உங்களையும் அது கடிக்கும் எனவும், நீங்கள் அங்கிருந்தால் அவதானமாக இருக்கவும் எனவும், நான் Airbnb (வீடுகளை வாடகைக்கு விடும் நிறுவனம்) வீடுகளை வாடகைக்கு எடுக்கமாட்டேன் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. Jimmy Fallon முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி மக்ரோனை நக்கலடித்து நிகழ்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content