ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இளைஞர்கள் – சிறுவன் செய்த செயல்

ஜெர்மனி நாட்டில் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே பாரிய வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றது.

ஜெர்மனியில் பெம்ஸ்ரைட் நகரத்தில் நிகழ்ந்த தாக்குதல் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள பெம்ஸ்ரைட் என்ற நகரத்தில் 2 உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு காரணமான 15 வயதுடைய சிறுவன் ஒருவர் 17 வயதுடைய இளைஞரான தன் உறவினரின் தலையின் போத்தல் ஒன்றினால் தாக்குதலை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக 17 வயதுடைய இளைஞர் படுங்காயம் அடைந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலை மேற்கொண்ட 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்