டெக்சாஸில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
டெக்சாஸில் கடுமையான வெள்ளத்தில் சிக்கிய சிறுமி ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வெள்ளத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட்டின் (Greg Abbott’) அலுவலகத்தால் பகிரப்பட்ட காணொளியில், அந்தச் சிறுமி மீட்கப்பட்டதும், அவரது குடும்பத்தினர் மற்றும் இரண்டு நாய்களும் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டதும் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே டெக்சாஸ் மலைப்பகுதி முழுவதும் பெய்த கனமழையால், ஆறுகள் பெருக்கெடுத்து உயிருக்கு ஆபத்தானவையாக மாறியுள்ளன.
மேற்படி வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான சாலைகளை அடித்துச் சென்றுள்ளன. இதனால் அவசரகால சேவைகள் மக்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளன.




