உலகம் செய்தி முக்கிய செய்திகள்

“புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் மீறிவிட்டது அமெரிக்கா”

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பாதுகாப்பு அச்சுறுத்தல் அமைப்பாக பிரித்தானியா அறிவித்துள்ளமை நியாயமற்றது:பொறுப்பற்றது - என சுட்டிக்காட்டி, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஈரான் வெளிவிவகார அமைச்சு.

போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) தற்போதைய நிலை குறித்து வெளியிடு கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஹொர்முஸ் நீரிணையில் ஈரானிய அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பயன்படுத்தாமல், அதற்குப் “இணையான மாற்றுப் பாதை” (Parallel route) ஒன்றை பயன்படுத்துமாறு கப்பல்களை அமெரிக்கா வற்புறுத்தி வருவதாக பகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் போரை விரும்பவில்லை என்றும், தம்மீது திணிக்கப்பட்ட இந்தப் போரில் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளையே எடுத்து வருவதாகவும் Esmaeil Baghaei தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி