இந்தியா

நச்சு வாயு கசிவால் சுரங்க பாதையில் ஏற்பட்ட விபத்து – 10 பேர் உயிரிழப்பு

  • July 21, 2026
  • 0 Comments

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள ஒரு நீர்மின் திட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 17 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இமயமலைப் பகுதியில், பூட்டான் மற்றும் திபெத் எல்லையருகே உள்ள சமர்துங் கிராமத்தில், நேற்று இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அரசுக்குச் சொந்தமான தேசிய நீர்மின் சக்தி கழகத்தின் (NHPC) 500 மெகாவாட் திட்டத்திற்காக, டீஸ்டா ஆற்றின் மீது கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற போதே இந்த […]

உலகம்

மத்தியக்கிழக்கில் மோதல்கள் நிறைவுக்கு வர வாய்ப்பில்லை – அமெரிக்க உளவுத்துறை தகவல்

  • July 21, 2026
  • 0 Comments

ஈரானின் பேச்சுவார்த்தை நிலையை மாற்றுவதற்கோ அல்லது நடந்து வரும் மோதலைத் தணிப்பதற்கோ வாய்ப்பில்லை என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. ஈரான் தனது தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் ஜலசந்தியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலைத் தாக்கியுள்ளது. அதே நேரத்தில் அதன் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கடைசி நாள் வரை போராடுவோம் என்று சபதம் செய்துள்ளது. இந்நிலையிலேயே உளவுத்துறையின் தகவல் வந்துள்ளது. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, கத்தார், எகிப்து, ஓமன் மற்றும் பாகிஸ்தான் […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் பணவீக்கம் சரிய வாய்ப்பு – பர்ன்ஹாமிற்கு காத்திருக்கும் சவால்

  • July 21, 2026
  • 0 Comments

கடந்த ஜுன் மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு (Andy Burnham) தற்காலிக ஊக்கத்தை அளிக்கிறது. மே மாதத்தில் 2.8% ஆக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 2.7% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாகும். ஜூன் மாதத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 16 பென்ஸுக்கு  மேல் சரிந்துள்ளது. இது 2000-ஆம் ஆண்டிற்குப் […]

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இலங்கை செய்தி

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை அமைக்க ஏற்பாடா?

  • July 21, 2026
  • 0 Comments

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் இடத்தில், நாளை (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இது தொடர்பாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்விடயம் […]

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 13 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளாகும். இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 93 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரையில் 467 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 444 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.  

ஐரோப்பா

போலந்து முதல் இத்தாலி வரை – 06 நாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நடை பாதை

  • July 21, 2026
  • 0 Comments

போலந்தின் பால்டிக் கடற்கரையிலிருந்து இத்தாலியின் ஏட்ரியாடிக் கடல் வரை ஆறு நாடுகளை இணைக்கும் நடைபாதையொன்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வோல்ஃப் டிரெயில்’ (Wolf Trail) என்றழைக்கப்படும் இந்த பாதையானது சுமார் 2,000 மைல் நீளம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நிறுவனமான ஜாக் வோல்ஃப்ஸ்கின் (Jack Wolfskin) வடிவமைத்த இந்த பாதையானது, போலந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் சுலோவீனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த முழுப் பாதையிலும் பயணிக்கும் மலையேறுபவர்கள் 78,416 மீட்டர் […]

இந்தியா

மோடியின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் – ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது

  • July 21, 2026
  • 0 Comments

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவுப் பிரச்சினைக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து, இந்தியப் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இன்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்கவும், அந்த பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தவும், பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய   எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் விடுமுறையை கழிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் – 60 பேர் மருத்துவமனையில்

  • July 21, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் (Costa del Sol) பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்த 60 பேர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த ஹோட்டலில், நீச்சல் குளத்தில் நீந்திய பிறகே குறைந்தது 60 பேர் சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் சிலர் கோஸ்டா டெல் சோல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மற்றவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. குளோரின் மற்றும் அமிலத்தைச் செலுத்தும் அழுத்தக் […]

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கையளிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது: “கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயன்றன. […]

ஐரோப்பா

ஏலத்திற்கு வரும் டைட்டானிக் கப்பலில் பயணித்த பயணி ஒருவர் எழுதியக் கடிதம்

  • July 21, 2026
  • 0 Comments

டைட்டானிக் கப்பலில் இரண்டாம் வகுப்புப் பயணியாக இருந்த ஹென்றி பிரைஸ் ஹோட்ஜஸ் (Henry Price Hodges) எழுதிய கடிதம் ஒன்று, ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. வில்ட்ஷயரில் (Wiltshire) இந்த கடிதம் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், சுமார் 35000 பவுண்ட்ஸ் வரை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1912 ஏப்ரல் 10 அன்று குயின்ஸ்டவுன் அஞ்சல் முத்திரையுடன் திகதியிடப்பட்ட இந்த கடிதம் நண்பர் ஒருவருக்கு  எழுதப்பட்டிருந்ததுடன், கப்பலில் நிலவிய நல்ல வானிலை மற்றும் இனிமையான சூழலை விவரித்திருந்தது. சவுத்தாம்ப்டனில் […]