ஏலத்திற்கு வரும் டைட்டானிக் கப்பலில் பயணித்த பயணி ஒருவர் எழுதியக் கடிதம்
டைட்டானிக் கப்பலில் இரண்டாம் வகுப்புப் பயணியாக இருந்த ஹென்றி பிரைஸ் ஹோட்ஜஸ் (Henry Price Hodges) எழுதிய கடிதம் ஒன்று, ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
வில்ட்ஷயரில் (Wiltshire) இந்த கடிதம் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், சுமார் 35000 பவுண்ட்ஸ் வரை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1912 ஏப்ரல் 10 அன்று குயின்ஸ்டவுன் அஞ்சல் முத்திரையுடன் திகதியிடப்பட்ட இந்த கடிதம் நண்பர் ஒருவருக்கு எழுதப்பட்டிருந்ததுடன், கப்பலில் நிலவிய நல்ல வானிலை மற்றும் இனிமையான சூழலை விவரித்திருந்தது.
சவுத்தாம்ப்டனில் கப்பலில் ஏறிய ஹோட்ஜஸ் (Hodges), அணிவகுப்பு, பாடுதல், மற்றும் “வரவேற்பறைகளில் டோமினோ மற்றும் சீட்டு விளையாடுதல்” உள்ளிட்ட பல்வேறு பயணிகளின் செயல்பாடுகளை இந்த கடித்தில் விவரித்துள்ளார்.
கப்பல் புறப்பட்டு 05 நாட்களுக்கு பிறகு 1912 ஏப்ரல் 15 அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது ஹோட்ஜஸும் உயிரிழந்தார்.
ஏலதாரர் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், அந்தக் கடிதத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதுடன், அந்தக் கப்பலில் பயணித்த ஒரு இரண்டாம் வகுப்புப் பயணியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தனித்துவமான சித்திரத்தை வழங்குகிறது என்றும் கூறினார்.





