ஐரோப்பா

ஸ்பெயினில் விடுமுறையை கழிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் – 60 பேர் மருத்துவமனையில்

ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் (Costa del Sol) பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்த 60 பேர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத அந்த ஹோட்டலில், நீச்சல் குளத்தில் நீந்திய பிறகே குறைந்தது 60 பேர் சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் சிலர் கோஸ்டா டெல் சோல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மற்றவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

குளோரின் மற்றும் அமிலத்தைச் செலுத்தும் அழுத்தக் குழாய் (pressure pump) உடைந்ததால்,  விச வாயுக்கள் வெளியேறியிருக்கலாம் என  முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஹோட்டலின் நீச்சல் குளம் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டது, மேலும் மலகாவைச் சேர்ந்த ஆய்வக பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கள ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்