ஆஸ்திரேலியா செய்தி

காசா விடயத்தில் பிரிட்டன் இரட்டை வேடம்!

  • May 23, 2026
  • 0 Comments

காசா விவகாரத்தில் பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் Yvette Cooper இரட்டை வேடம் போடுகின்றார் என்று சர்வதேச சட்ட நிபுணரும், மனித உரிமை சட்டத்தரணியுமான Tayab Ali விமர்சித்துள்ளார். காசாவின் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என Yvette Cooper கவலை வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்று ஒருபுறம் பேசிக்கொண்டு, மறுபுறம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை பிரிட்டன் வழங்கிவருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை பிரிட்டன் அரசு […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியா? நிதி அமைச்சு கூறுவது என்ன?

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்களை நிதி அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேற்படி தகவல்களை நிராகரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்டதுபோல பொருளாதார நெருக்கடி தற்போது மீண்டும் ஏற்படப்போகின்றது என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 2022 இல் […]

உலகம் செய்தி

அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் Tulsi Gabbard ராஜினாமா!

  • May 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த துளசி கப்பார்ட், (Tulsi Gabbard ) தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கணவருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை எலும்பு புற்றுநோய் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவரது பணியைப் பாராட்டியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக ஆரோன் லூகாஸ் தற்காலிகமாகப் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார். Tulsi Gabbard பணிக்காலம் வெனிசுலா மற்றும் ஈரான் தொடர்பான விவகாரங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் சந்தித்தது. இராணுவத் […]

இலங்கை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர் பலி

  • May 23, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர், நேற்று (22) வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

பிரதமர் மோடியை அடுத்தவாரம் சந்திக்கிறார் விஜய்!

  • May 23, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய், அடுத்த வாரம் டெல்லிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்தும் நோக்கிலேயே அவரது டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை, விஜய் சந்திக்கவுள்ளார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஸ்டாலின், வைகோ , சீமான் உள்ளிட்ட தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். அடுத்த […]

ஆஸ்திரேலியா செய்தி

மீண்டும் தீவிர அரசியலுக்குள் நுழைகிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Tony Abbott!

  • May 23, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட், லிபரல் கட்சியின் புதிய தேசிய தலைவராக (federal president) Tony Abbott நியமிக்கப்படவுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் தீவிர செயற்பாட்டு அரசியலுக்குள் நுழையவுள்ளார். அடுத்த வாரம் மெல்போர்னில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய குழு கூட்டத்தில டோனி அபோட்டின் நியமனம் உறுதி செய்யப்படவுள்ளது. இப்பதவிக்கு போட்டியிடும் ஒரே வேட்பாளர் அவர் மட்டும்தான் என லிபரல் கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “அவர் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றும் அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். […]

செய்தி விளையாட்டு

பஞ்சாப், லக்னோ அணிகள் இன்று மோதல்!

  • May 23, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள லக்னோ ஏற்கனவே பிளே ஆப் சுற்றை இழந்துவிட்டது. அதேவேளை, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை நீட்டிக்க இன்றைய கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிளே […]

செய்தி விளையாட்டு

மண்கவ்வினாலும் முதலிடத்தை தக்கவைத்தது RCB!

  • May 23, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் நேற்றிரவு நடைபெற்ற 67-வது லீக் போட்டியில் Hyderabad அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. RCB அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரைக் குவித்தது ஹைதராபாத். அணியின் ஆரம்ப வீரர் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 5 […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க போர் விமானங்களை துரத்திய பறக்கும் தட்டுக்கள் : UFO பற்றிய புதிய கோப்புகள் வெளியீடு!

  • May 22, 2026
  • 0 Comments

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFO) தொடர்பான கோப்புகளின் இரண்டாவது தொகுதியை பென்டகன் இன்று வெளியிட்டுள்ளது. இதில், வகைப்படுத்தப்படாத ஏராளமான புகைப்படங்கள்,  காணொளிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. 116 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆவணத்தில்,  1948 மற்றும் 1950-க்கு இடையில் நியூ மெக்சிகோவின் சாண்டியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகில் பதிவான ‘பச்சை நிற கோளங்கள்’, ‘வட்டுகள்’ மற்றும் ‘நெருப்புப் பந்துகள்’ போன்ற 209 முறை இனங்காணப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கிறது. அத்துடன் இந்த சமீபத்திய வெளியீட்டில் […]

உலகம் செய்தி

தேர்தலில் வெற்றிப் பெற உறுதுணையாக இருந்த மக்களிடம் இருந்து ஆதரவை இழந்தார் ட்ரம்ப்!

  • May 22, 2026
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் லத்தீன் மக்களிடம் இருந்து கணிசமான ஆதரவை பெற்றிருந்தார். இது அவருடைய தேர்தல் வெற்றியை உறுதி செய்திருந்தது. இருப்பினும் தற்போது அவ் மக்களிடம் அவருக்கான ஆதரவு கணிசமாக குறைந்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்கள் ஆதரவானது 93 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த ஆதரவுக் குறைவுக்கு, அவரது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறையே  காரணம் என சொல்லப்படுகிறது. குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இடம்பெற்ற […]