உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க போர் விமானங்களை துரத்திய பறக்கும் தட்டுக்கள் : UFO பற்றிய புதிய கோப்புகள் வெளியீடு!

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFO) தொடர்பான கோப்புகளின் இரண்டாவது தொகுதியை பென்டகன் இன்று வெளியிட்டுள்ளது.

இதில், வகைப்படுத்தப்படாத ஏராளமான புகைப்படங்கள்,  காணொளிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன.

116 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆவணத்தில்,  1948 மற்றும் 1950-க்கு இடையில் நியூ மெக்சிகோவின் சாண்டியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகில் பதிவான ‘பச்சை நிற கோளங்கள்’, ‘வட்டுகள்’ மற்றும் ‘நெருப்புப் பந்துகள்’ போன்ற 209 முறை இனங்காணப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கிறது.

அத்துடன் இந்த சமீபத்திய வெளியீட்டில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் அறிக்கையும் இடம்பெற்றுள்ளது. அவர், 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது ஹெலிகாப்டருக்கு அருகில் ‘இரண்டு பெரிய கோளங்கள் திடீரெனப் பிரகாசித்ததைக்’ கண்டதாக விவரித்துள்ளார்.

அவை நீள்வட்ட வடிவத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுவதுடன், ஒளியை உமிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அருகிலிருந்த போர் விமானங்களுக்கு மேலே இந்தக் கோளங்கள் தோன்றியதைக் கண்டதாகவும், அவை விமானங்களைத் ‘துரத்துவது’ போல் தோன்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், ஆரஞ்சு நிறக் கோளங்கள் ஒரு தனித்துவமான முக்கோணத்தை உருவாக்கி மறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,