இந்தியா செய்தி தமிழ்நாடு

பிரதமர் மோடியை அடுத்தவாரம் சந்திக்கிறார் விஜய்!

தமிழக முதல்வர் விஜய், அடுத்த வாரம் டெல்லிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்தும் நோக்கிலேயே அவரது டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை, விஜய் சந்திக்கவுள்ளார்.

முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஸ்டாலின், வைகோ , சீமான் உள்ளிட்ட தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அடுத்த வாரம் டெல்லி செல்லும் முதல்வர் விஜய், முதலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க உள்ளார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளார்.

தமிழக அரசின் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!