அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் Tulsi Gabbard ராஜினாமா!
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த துளசி கப்பார்ட், (Tulsi Gabbard ) தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது கணவருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை எலும்பு புற்றுநோய் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவரது பணியைப் பாராட்டியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக ஆரோன் லூகாஸ் தற்காலிகமாகப் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார்.
Tulsi Gabbard பணிக்காலம் வெனிசுலா மற்றும் ஈரான் தொடர்பான விவகாரங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் சந்தித்தது.
இராணுவத் தலையீடுகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த அவர், ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது.
தற்போது இவரது வெளியேற்றம், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.




