ஆஸ்திரேலியா செய்தி

மீண்டும் தீவிர அரசியலுக்குள் நுழைகிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Tony Abbott!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட், லிபரல் கட்சியின் புதிய தேசிய தலைவராக (federal president) Tony Abbott நியமிக்கப்படவுள்ளார்.

இதன்மூலம் அவர் மீண்டும் தீவிர செயற்பாட்டு அரசியலுக்குள் நுழையவுள்ளார்.

அடுத்த வாரம் மெல்போர்னில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய குழு கூட்டத்தில டோனி அபோட்டின் நியமனம் உறுதி செய்யப்படவுள்ளது.

இப்பதவிக்கு போட்டியிடும் ஒரே வேட்பாளர் அவர் மட்டும்தான் என லிபரல் கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“அவர் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றும் அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

2013 முதல் 2015 வரை ஆஸ்திரேலியப் பிரதமராகப் பதவி வகித்த டோனி அபோட், ஆஸ்திரேலிய பிரதமராக பதவி வகித்தார்.

இப்பதவிக்காக டோனி அபோட்டுடன் போட்டியிடவிருந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவுனர் , தற்போது அந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அதற்குப் பதிலாக அவர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், பீட்டர் டட்டனின் தலைமையின் கீழ் லிபரல் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த உறுப்பினர்களான நிக் மின்சின் மற்றும் ப்ரூ கோவர்ட் ஆகியோரைக் கொண்டு கட்சியின் தோல்வி குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது.

இந்த மறுஆய்வு அறிக்கையின்படி, லிபரல் கட்சி 55 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளதாகவும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பிற அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் முற்றிலுமாக இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நவீன ஆஸ்திரேலியாவைப் பிரதிபலிக்கும் வகையில் இளைஞர்கள் மற்றும் பல்லின சமூகங்களை உள்வாங்கி கட்சியின் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!