இந்தியா செய்தி தமிழ்நாடு

கோவை சிறுமி வன்கொடுமை சம்பவம்: கடும் நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு!

  • May 23, 2026
  • 0 Comments

கோவையில் சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.” என தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார். தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் […]

அரசியல் இலங்கை செய்தி

13 ஐ முழுமையாக அமுலாக்க ஆதரவு: கனடா தூதுவரிடம் சஜித் உறுதி!

  • May 23, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவர் Isabelle Catherine Martin ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயக ஆட்சி, மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பாக இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர். மாகாண சபை தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தினார். இலங்கையின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: மூவர் பலி!

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 17 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர்.357 வீடுகள் பகுதியளவும், 8 வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 912 பேரும், கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 569 குடும்பங்களைச் […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தமிழரசுக் கட்சியும் வலியுறுத்து!

  • May 23, 2026
  • 0 Comments

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவு உட்பட பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து கட்சி குழு கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் நேற்று (22) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கயந்த கருணாதிலக்கவும், தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சாணக்கியனுமே இந்த கோரிக்கையை விடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து எதிரணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்திலும், சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உலகம் செய்தி

ஈரானின் கோரிக்கைகளை ட்ரம்ப் கட்டாயம் ஏற்க வேண்டும்!

  • May 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஈரானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Reza Talaei-Nik எச்சரித்துள்ளார். ஈரானிய மக்களின் உரிமைகளை அமெரிக்கா அங்கீகரிக்கத் தவறினால், அது அந்நாட்டிற்கு மேலும் பல தோல்விகளை மட்டுமே தரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய மோதல்களில் இருந்து அமெரிக்கா தப்பிக்க வேண்டுமானால், அது போர்க்களத்திலும் இராஜதந்திர ரீதியிலும் ஈரானின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இந்த மோதலைத் தொடர்வது […]

உலகம்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற கட்டுப்பாடு : ட்ரம்பின் புதிய அறிவிப்பு!

  • May 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற விரும்பும் வெளிநாட்டினர், தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. சட்டப்பூர்வ குடியேற்றத்தை மேலும் கடினமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த எதிர்பாராத உத்தரவால் அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்தவர்கள், வேலை மற்றும் மாணவர் விசா வைத்திருப்பவர்கள், அகதிகள் மற்றும் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் உள்ளிட்டோர் […]

இலங்கை

அலுத்கமவில் கரையொதுங்கிய தலையால் பரபரப்பு!

  • May 23, 2026
  • 0 Comments

அலுத்கம, மொரகல்லவில் வெட்டப்பட்ட நிலையில் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது. மொரகல்லவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா விடுதிக்குப் பின்புறம் அமைந்துள்ள கடற்கரையில், இந்த தலை கண்டறியப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் தலையை கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் ஆண் ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு : 82 பேர் பலி

  • May 23, 2026
  • 0 Comments

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு வெடிப்பு சம்பவித்த தருணத்தில், 247 தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

அரசியல் இலங்கை செய்தி

” பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் இருக்கவில்லை”

  • May 23, 2026
  • 0 Comments

“பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் இருக்கவில்லை. புலிகள் அமைப்பை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடனேயே திட்டங்களை வகுத்தேன்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார் எனக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ புலிகளை உயிருடன் பிடித்து அவர்களுடன் பேச்சு நடத்தும் நோக்கில் நான் போர் வியூகம் […]

இலங்கை

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு! 1900இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

  • May 23, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. இதற்கிடையே  தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களில்   1,966 குடும்பங்களைச் சேர்ந்த    7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 201 பேர் […]