தேர்தலில் வெற்றிப் பெற உறுதுணையாக இருந்த மக்களிடம் இருந்து ஆதரவை இழந்தார் ட்ரம்ப்!
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் லத்தீன் மக்களிடம் இருந்து கணிசமான ஆதரவை பெற்றிருந்தார். இது அவருடைய தேர்தல் வெற்றியை உறுதி செய்திருந்தது.
இருப்பினும் தற்போது அவ் மக்களிடம் அவருக்கான ஆதரவு கணிசமாக குறைந்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஆதரவானது 93 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த ஆதரவுக் குறைவுக்கு, அவரது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறையே காரணம் என சொல்லப்படுகிறது.
குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கைது நடவடிக்கைகள் அந்த சமூகத்தினரை கடுமையாக பாதித்துள்ளது.




