இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு!

  • October 21, 2025
  • 0 Comments

உலகளாவிய மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இளஞ் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) அறிவித்தார். நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் துறை வெளியிட்ட அறிக்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் நுழைவாயிலில் ஒரு பேட்ஜை (badge) விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். உலகளாவிய மார்பக புற்றுநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படவுள்ளது. ஒக்டோபர் மாதம் […]

உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக வரலாறு படைத்துள்ள சனே தகைச்சி (Sanae Takaichi)

  • October 21, 2025
  • 0 Comments

ஜப்பானின் புதிய பிரதமராக தீவிரவாத பழமைவாத கொள்கைகளைக் கொண்ட பெண் ஒருவர் முதல் தடவையாகப் பதவியேற்கவுள்ளார் பிரதமருக்கான தெரிவுக்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 465 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் சனே தகைச்சி (Sanae Takaichi) 237 வாக்குகளைப் பெற்று புதிய பிரதமராகத் தெரிவானார். அத்துடன், இன்று(21) பிற்பகலில் பதவியேற்பதற்கு முன்னர் அதிகாரம் குறைந்த மேல் சபையின் பெரும்பான்மையையும் அவர் பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சுதந்திர ஜனநாயகக் கட்சி நேற்று(20) வலதுசாரி ஜப்பான் புதுமைக் […]

பொழுதுபோக்கு

டியூட் படக்குழு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

  • October 21, 2025
  • 0 Comments

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளியையொட்டி டியூட், டீசல், மற்றும் பைசன் ஆகிய 3 படங்கள் கடந்த வெள்ளியன்று வெளிவந்தன. இவற்றில் பைசன் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன. டியூட் படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்தாலும் தொடர்ந்து வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. டியூட் படம் வெளியான 3 நாட்களில் மட்டும் ரூ. 66 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை – மூன்று பேர் உயிரிழப்பு!

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சீரற்ற வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் இயற்கை பேரழிவுகளால்  மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுக்கைக்கு அருகில் […]

பொழுதுபோக்கு

ஜீ விருதுகள் : ஒரே ஒரு கேள்வியால் முழு அரங்கையும் அழ வைத்த அர்ச்சனா…!

  • October 21, 2025
  • 0 Comments

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், சரிகமப போன்ற ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஜீ தமிழ் குடும்பத்தில் பணியாற்றி வரும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரது திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் ஜீ தமிழ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஜீ குடும்ப விருதுகள் என்ற பெயரில் விருது விழாவை நடத்தி வருகிறது. அந்த […]

இந்தியா

இந்தியாவின் தலைநகரில் சுவாச பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்கள்!

  • October 21, 2025
  • 0 Comments

இந்தியாவின் தலைநகரான டெல்லியில்  (Delhi) தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் சுவாச பிரச்சினையை எதிர்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) படி, டெல்லியில் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (AQI) இன்று காலை 10 மணி நிலவரப்படி 359  என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பவானாவில் (Bawana) காலை 10 மணி நிலவரப்படி AQI 432 ஆகவும், ஜஹாங்கிர்புரியில் (Jahangirpuri) 405 ஆகவும், […]

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றம்

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை 5,000 ரூபாய் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 356,000 ரூபாயாக குறைந்துள்ளது. சனிக்கிழமை, இதன் விலை 360,800 ரூபாய் என மதிப்பிடப்பட்டது. இதற்கிடையில், சனிக்கிழமை 390,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று 385,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் […]

ஐரோப்பா

பிரான்ஸில் திடீர் சூறாவளி – ஒருவர் பலி, பலர் படுகாயம்!

  • October 21, 2025
  • 0 Comments

பிரான்ஸின் பாரிஸ் (Paris) அருகே உள்ள வால்-து-வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தில் தாக்கிய பயங்கர சூறாவளி (Tornado) பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூறாவளியில் சிக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்தனர். எர்மோ நகரில் கட்டுமானப் பணியில் இருந்த மூன்று ராட்சத கிரேன்கள் சரிந்தன, பல வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அதிகாரிகளால் எதிர்பாராத, மிகவும் குறுகிய மிகத்தீவிரமான வானிலை நிகழ்வு  என இது விவரிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 80 தீயணைப்பு வீரர்கள், 50 […]

பொழுதுபோக்கு

இலங்கையின் நாமத்தை உலக அளவில் ஓங்கி ஒலிக்கச்செய்த இளைஞன்…

  • October 21, 2025
  • 0 Comments

யூடியூப் என்பது இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தினருக்கு நல்ல பொழுதுபோக்காகவும், பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தளமாகவும் காணப்படுகின்றது. இதை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். சமையல், அழகுக்கலை, தையல், பொழுதுபோக்கு, ரீல்ஸ், சினிமா என பல பிரிவுகளில் யூடியூப்பை மக்கள் பயன்டுத்துகின்றார்கள். அந்த வகையில் இலங்கையிலும் ஏராளமானோர் யூடியூப் பயனர்களாகவும் இருக்கின்றனர் பணம் தேடுவதற்கான தளமாகவும் பயன்படுத்துகின்றனர். இதில் வெற்றி பெற்ற ஒருவரைப்பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகின்றோம். யூடியூப் சேனலான Wild Cookbookஐ […]

இலங்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் – அடுத்த வாரம் இறுதி முடிவு!

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் உள்ள தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பதிலளிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களே நாங்கள். அதனை தக்கவைக்கும் எண்ணம் இல்லை. எனினும், சட்டமொன்றை இரத்து செய்யும்போது அதனை விஞ்ஞானப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அமுல்படுத்தவுள்ள புதிய சட்டவரைவை தயாரிப்பதற்குரிய […]