ஐரோப்பா செய்தி

2028ம் ஆண்டுக்குள் ரஷ்ய எரிவாயு இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

  • October 20, 2025
  • 0 Comments

ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2028ம் ஆண்டுக்குள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளன. லக்சம்பேர்க்கில் (Luxembourg) நடந்த ஒரு கூட்டத்தின் போது, ​​குழாய் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) தடை செய்யும் திட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் வாக்களித்துள்ளனர். இந்த திட்டம் இப்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும், அங்கு […]

உலகம் செய்தி

மடகாஸ்கரின் புதிய பிரதமராக பிரபல தொழிலதிபர் நியமனம்

  • October 20, 2025
  • 0 Comments

இந்த மாதம் மடகாஸ்கரின் ஆட்சியைக் கைப்பற்றிய CAPSAT ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina), தொழிலதிபரும் ஆலோசகருமான ஹெரிண்ட்சலமா ரஜஓனரிவேலோவை (Herintsalamah Rajaonarivelo) நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். மேலும், புதிய தேர்தல்களை நடத்துவதற்கு முன்பு, இராணுவம் இரண்டு ஆண்டுகள் வரை ஒரு சிவில் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி செய்யும் என்று மைக்கேல் ராண்ட்ரியானிரினா குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா (Andry Rajoelina) அக்டோபர் 13ம் திகதி […]

இலங்கை செய்தி

இலங்கை: ஹிக்கடுவையில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு

  • October 20, 2025
  • 0 Comments

காலி மாவட்டத்தின் ஹிக்கடுவையில் (Hikkaduwa) ஒரு வீட்டை குறி வைத்து துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சுமார் 4 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக ஹிக்கடுவ காவல்துறை தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா

  • October 20, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) ஆகியோர் அரிய மண் மற்றும் முக்கியமான கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் வெள்ளை மாளிகையில் இன்று நடந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்திற்காக நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் வர்த்தகம், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இராணுவ […]

இலங்கை செய்தி

இலங்கை: விடுதி வசதிகள் பற்றாக்குறையால் சிற்றுண்டிச்சாலையில் தங்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

  • October 20, 2025
  • 0 Comments

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் 2022/23 தொகுதி மாணவர்கள், வளாகத்தில் உள்ள விடுதி வசதிகள் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். விடுதி வசதிகள் இல்லாததால் தாங்கள் தற்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இதன் விளைவாக, சிற்றுண்டிச்சாலையில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், மாணவர்கள் தங்கள் கல்விப் பொறுப்புகளில் உறுதியாக இருப்பதாகவும், நாளை திட்டமிடப்பட்ட விரிவுரைகளில் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

ஹாங்காங்கில் விபத்துக்குள்ளான சரக்கு விமானம் – இருவர் உயிரிழப்பு

  • October 20, 2025
  • 0 Comments

ஹாங்காங் (Hong Kong) விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ​​ஒரு சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்திற்கான காரணத்தை அறிய கருப்பு பெட்டியை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. 30 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 41 வயதுடைய மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக ஹாங்காங் விமானத்துறை தெரிவித்துள்ளது. துபாயில் இருந்து ஹாங்காங் வந்த போயிங் 747 […]

உலகம் செய்தி

அவசர கருத்தடை மாத்திரையை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்த ஜப்பான்

  • October 20, 2025
  • 0 Comments

ஜப்பான் முதன்முறையாக அவசர கருத்தடை மாத்திரையை மருந்துச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாத்திரை “வழிகாட்டுதல் தேவைப்படும் மருந்து” என்று பெயரிடப்பட்டுள்ளது, அதாவது பெண்கள் ஒரு மருந்தாளரின் முன்னிலையில் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பொதுவாக பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அது எவ்வளவு விரைவில் எடுக்கப்படுகிறதோ அவ்வளவு பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ASKA Pharmaceutical நிறுவனம், நோர்லெவோ (Norlevo) என்ற வர்த்தக […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • October 20, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில் நடைபெற்ற 21வது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா (Hasini Perera) 85 ஓட்டங்களும் சமரி அத்தப்பத்து (Chamari Athapaththu) […]

இலங்கை

வங்கியில் கணக்கு இல்லாத இலங்கை அரசியல்வாதி

  • October 20, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தனவுக்கு வங்கிக் கணக்கு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்டபோது நடந்த உரையாடலின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் குழுவிற்கு லஞ்ச ஒழிப்பு ஆணையம் விவாதப் பொருளாக மாறியது. வஜிர அபேவர்தன, முகமது முசம்மில், நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், மனுஷ நாணயக்கார, நிஷாந்த ஸ்ரீ வர்ண சின்ஹா ​​மற்றும் […]

பொழுதுபோக்கு

பெயரை மாற்றிய ஹன்சிகா? என்ன செய்தார் தெரியுமா?

  • October 20, 2025
  • 0 Comments

சினிமா பிரபலங்களிடையே திருமண வாழ்க்கை என்பது அனைவருக்கும் இறுதிவரை செல்வதில்லை. எவ்வளவு பிரம்மாண்டமாக திருமணத்தை செய்கின்றார்களோ அது ஆசை தீர்ந்த பின் ஓரிரு வருடங்களில் விவாகரத்தில்தான் சென்று முடியும். இப்படியிருக்க காதலித்து திருமணம் முடித்து இறுதிவரை வாழும் ஜோடிகளை சினிமாவில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே உள்ளனர். அந்த வகையில் அண்மைக்காலமாக பிரபல நடிகை ஹன்சிகாவின் திருமண வாழ்க்கை குறித்து செய்திகள் அடிப்படுகின்றன. தற்போது மற்றுமொரு செய்தியும் வருகின்றது. அதாவது, ஹன்சிகா அவரது பெயரில் மாற்றம் செய்து இருக்கிறார். […]