ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 15 பெங்குவின்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

  • October 21, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் Sea Life London Aquarium மீன் காட்சியகத்தில் உள்ள 15 பென்குயின்களை உரிய பகுதிகளில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விலங்குநல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அந்தப் பென்குயின்கள் 14 ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சமோ சுத்தமான காற்று வசதியில்லாத அடித்தளத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவற்றின் நீச்சல் குளத்தின் ஆழம் சுமார் 2 மீட்டர் மட்டுமே என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அது பென்குயின்களுக்கு போதுமான இடம் […]

விளையாட்டு

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கம்

  • October 21, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி அவருக்கு பதிலாக ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் தலைமை பந்து பயிற்சியாளர் மைக் ஹெசன் இடையே இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ரிஸ்வான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை […]

இலங்கை

செவ்வந்தி தலைமறைவாகியிருக்க உதவிய கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் கைது

  • October 21, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தினுடான பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். அத்துடன், அவர் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேபாளத்திலிருந்து கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அதற்கமைய, கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் இஷாரா செவ்வந்தி தலைமறைவாயிருந்தார். […]

இலங்கை

இலங்கையில் பாதாள குழுக்களுடன் இணைந்து செயற்பட்ட 18 இளம் பெண்கள் கைது

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கையில் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 மற்றும் 45 வயதுக்கிடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வியாபாரம், துப்பாக்கி கடத்தல், கொலைக்கு உளவு பார்த்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்வியல்

போதுமான அளவு நல்ல உறக்கம் இல்லாதவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

  • October 21, 2025
  • 0 Comments

மனிதர்களுக்கு போதுமான அளவு ஆரோக்கியமான உறக்கமானது, நோயெதிர்ப்பு அமைப்பு, மன ஆரோக்கியம், நினைவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு வழிவகுப்பதாக புதிய ஆய்வொன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உறக்கத்திற்கு தடையாக இருக்கும் சிறிய இடையூறுகளும் உடலின் உள் செயல்முறைகளை சீர்குலைக்கும். இது ஆற்றல், மனநிலை மற்றும் கவனத்தை பாதிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதுமான அளவு உறக்கம் வராமல் இருப்பது நாள்பட்ட சுகாதார நிலைமைகள், பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் சில […]

உலகம் செய்தி

ஹமாசிற்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதல் – ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

  • October 21, 2025
  • 0 Comments

ஹமாசிற்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், காசாவில் போர் நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாசும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில், போர் நிறுத்தம் மீண்டும் உறுதியாக செயல்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. ரபாவில் தங்களை குறிவைத்து தீவிரவாதிகள் யுத்ததாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அதில் இரண்டு படைத்தரப்பினர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் […]

உலகம்

தென் கொரியாவில் 8 வயது மாணவியை கொலை செய்த ஆசிரியைக்கு வழங்கப்பட்ட தண்டனை

  • October 21, 2025
  • 0 Comments

தென் கொரியாவில் 8 வயது மாணவியை கொலை செய்ததற்காக பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. வகுப்பறையில் இருந்தபோது ஆசிரியை மாணவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். உயிரிழந்த மாணவியின் பெற்றோர் ஆசிரியை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். மேலும், கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் பாடசாலை ஆசிரியை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் […]

உலகம்

சீனாவின் நடவடிக்கைகளுக்கு இராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்ட ஆஸ்திரேலியா

  • October 21, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானத்தை அண்மித்த பகுதியில் சீன போர் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமைக்காக ஆஸ்திரேலியா, பெய்ஜிங்கிடம் இராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தென் சீனக் கடலுக்கு மேல் பறக்கும் ஆஸ்திரேலிய இராணுவ விமானத்திற்கு மிக அருகில் சீன இராணுவ (PLA) Su-35 போர் விமானம் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் விமானத்தின் விமானிகள் காயமடையவில்லை என்ற போதும், இந்த சம்பவம் பாதுகாப்பற்றது மற்றும் தொழில்முறைக்கு புறம்பானது என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) […]

இலங்கை

இலங்கையில் மாசி கருவாட்டுக்குள் சிக்கிய மர்மம் – விற்பனையாளர் அதிரடி கைது

  • October 21, 2025
  • 0 Comments

தங்காலையில் மாசி கருவாடு விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமைக்காக தங்காலை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மாசி கருவாடு விற்பனை செய்யும் போர்வையில் இந்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் 28 வயதானவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் சந்தேகநபர் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

டோன்பாஸ் பகுதியை ரஷ்யாவிடம் விட்டுக் கொடுக்க முடியாது – ட்ரம்ப் திட்டவட்டம்

  • October 21, 2025
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கு டோன்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யாவிடம் விட்டுக் கொடுப்பது குறித்து தான் எந்தவிதமான கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்தித்த பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார். டோன்பாஸ் பிராந்தியம் தற்போது உள்ள நிலையிலேயே இருக்க வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும் இரு நாடுகளும் நிலப்பரப்புகளை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட்டு இராணுவத்தினரை மீள அழைக்க வேண்டும் என […]