ஐரோப்பா

இங்கிலாந்தில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆண்களே அதிகம்!

  • October 21, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் சுமார் 210,520 ஆண்கள் 90 அல்லது 90 வயதை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்த காலகட்டத்தில் வயதான  பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. 2004 இல் 309,300 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2024 இல் 414,720 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் 90 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகளை உடைய ஆண்களின் எண்ணிக்கை சாராசரியாக  […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வட்ஸ்அப்பில் அமுலுக்கு வரும் புதிய வரம்பு – பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • October 21, 2025
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள பயனர்களை ஸ்பேம் செய்திகள் மற்றும் விளம்பர அறிவிப்புகளால் ஏற்படும் தொல்லையில் இருந்து பாதுகாக்க, வட்ஸ்அப் (WhatsApp) ஒரு புதிய செய்தி வரம்பு (Messaging Limit) அம்சத்தை சோதித்து வருகிறது. அதிகரித்து வரும் வணிகச் செய்திகள் மற்றும் தெரியாத தனிநபர்களின் ஸ்பேம் (Spam) செய்திகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதற்கமைய, அறியாத பயனர்களுக்கு (Unknown Recipients) வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அனுப்பும் செய்திகளின் எண்ணிக்கையை இந்த வரம்பு கட்டுப்படுத்தும். […]

இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு பலப்பரீட்சை!

  • October 21, 2025
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெகுவிரைவில் கையளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா  தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியால் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது . அது முடிவடைந்த பின்னர் தர்க்க ரீதியாக பிரேரணை முன்வைக்கப்படும்.” எனவும் அஜித் பி பெரேரா  […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நாகசைதன்யா- சோபிதாவின் தீபாவளி கொண்டாட்டம்

  • October 21, 2025
  • 0 Comments

தீபாவளி என்றாலே இந்துக்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் தற்போது ஒர பண்டிகை வந்தால் அந்த சமயத்தவர் மட்டும் கொண்டாடுவது இல்லை. அனைவருமே பொதுவாக கொண்டாடுகின்றார்கள். உதாரணத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் மட்டுமா கொண்டாடுகின்றார்கள். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைவருக்குமே இது பண்டிகை தான் என்ற நவீன காலம் வந்துவிட்டது. அந்த வகையில் தீபாவளியை நடிகர் நடிகைகள் எவ்வாறு கொண்டாடியுள்ளார்கள் என்பதை சமூகஊடக பக்கத்தில் பிவிட்டு லைக்ஸை அள்ளுவார்கள். அந்த வகையில், சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா மற்றும் […]

இலங்கை

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைப் பயணம் – கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்

  • October 21, 2025
  • 0 Comments

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தத் தகவலை வெளியிட்டார். இவரின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அதேவேளை, ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக, வெளிவிவகார அமைச்சுக்குரிய குழுநிலை விவாதத்தின்போது நேரமெடுத்து விவாதிக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐரோப்பா

ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பிரித்தானிய இராணுவத்தினருக்கு அனுமதி!

  • October 21, 2025
  • 0 Comments

இராணுவ தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பிரித்தானிய இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey) நேற்று ஆற்றிய உரையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் நான்கு விமான தளங்கள் ட்ரோன் பார்வைகளை எதிர்கொண்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதே நேரத்தில் பல ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியில் ட்ரோன்கள் ஊடுறுவியிருந்தன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த சவால்களை அந்நாடுகள் எதிர்நோக்கியிருந்தன. இதனைத் தொடர்ந்தே […]

இலங்கை

இலங்கை பாடசாலைகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் – பிரதமர் தகவல்!

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் ஏறக்குறைய 36,178 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாகக் கூறினார். இதற்கமைய மேற்கு மாகாணத்தில் 4,630, தெற்கு மாகாணத்தில் 2,513, மத்திய மாகாணத்தில் 6,318, வடமேற்கு மாகாணத்தில் 2,990, ஊவா மாகாணத்தில் 2,780, வடமத்திய மாகாணத்தில் 1,568, கிழக்கு மாகாணத்தில் 6,613, […]

இலங்கை

ரூஹுணு(Ruhuna) பல்கலைக்கழகத்தில் இரு குழுக்களிடையே மோதல்: 6 மாணவர்கள் படுகாயம், 20 பேர் கைது

  • October 21, 2025
  • 0 Comments

ரூஹுணு(Ruhuna) பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் நடந்த கடும் மோதலில் ஆறு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 20 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த இந்தத் திடீர் மோதல் காரணமாக அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை […]

உலகம்

பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியில் சீனா செல்லும் ட்ரம்ப்?

  • October 21, 2025
  • 0 Comments

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நல்ல உறவைப் பேணவும், இந்த மாத இறுதியில் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை (Australian Prime Minister Anthony Albanese) நேற்று சந்தித்த ட்ரம்ப், தைவான் (Taiwan)  மீதான சீனத் தாக்குதல் குறித்த அச்சங்களைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனா (China) தைவானை (Taiwan) ஆக்கிரமிக்காது என்றும் அவர் நம்பிக்கை […]

உலகம்

அத்துமீறிய ஆஸ்திரேலிய விமானம்: சீனா கொதிப்பு!

  • October 21, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா தமது நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறியுள்ளது என்று சீனா குற்றஞ்சாட்டியுள்ளது ‘ஜிஷா தீவுகள் வழியாக ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானம் சீன வான்வெளிக்கும் அத்துமீறி நுழைந்தது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தென்சீனக் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்துக்கு அருகில் சீன விமானம் ஆபத்தான முறையில் தீப்பிழம்புகளை வெளியிட்டது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ்(Richard Marles) தெரிவித்தார் இச்சம்பவத்தால் ஆஸ்திரேலிய படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், இந்த சூழ்ச்சி […]