இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை – மூன்று பேர் உயிரிழப்பு!

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சீரற்ற வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் இயற்கை பேரழிவுகளால்  மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுக்கைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளம் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்