அந்த அரங்கம் காண்பதற்கு ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவைப் போலக் காட்சியளிக்கிறது. செய்தி விளையாட்டு

களத்தில் விளையாட்டு, வகுப்பறையில் கல்வி: பிரீமியர் லீக் வீரர்களின் புதிய அவதாரம்

  • September 30, 2026
  • 0 Comments

அந்த அரங்கம் காண்பதற்கு ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவைப் போலக் காட்சியளிக்கிறது. ஆனால், தொப்பி மற்றும் பட்டமளிப்பு அங்கிகளுடன் (caps and gowns) அங்கு திரண்டிருந்தவர்கள் பிரீமியர் லீக் கால்பந்து நட்சத்திரங்களும், ஐரோப்பிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் வீரர்களுமாவார்கள். இங்கிலாந்து தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்கள் சங்கத்தின் (PFA Business School) 2026-ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழாவில், எவர்டன் அணியின் மத்தியகள வீரர் கீர்னன் டியூஸ்பரி-ஹால், கொவென்ட்ரி சிட்டி அணியின் […]

பீகார் மாநிலம் கயாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை, கும்பல் ஒன்று சுற்றி வளைத்துத் துன்புறுத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

தம்பதியினரை சுற்றிவளைத்து துன்புறுத்தியோருக்கு வலை

  • September 30, 2026
  • 0 Comments

பீகார் மாநிலம் கயாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை, கும்பல் ஒன்று சுற்றி வளைத்துத் துன்புறுத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கயா பகுதியில் மோட்டார் சைக்கிளில் தம்பதி சென்று கொண்டிருந்தபோது, அவர்களை இடைமறித்த இளைஞர்கள் அடங்கிய கும்பல் ஒன்று தம்பதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களைச் சூழ்ந்துகொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். […]

2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான சதி வழக்கில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. இந்தியா செய்தி

டெல்லி கலவர வழக்கு: பிணை மனுக்கள் தள்ளுபடி

  • September 30, 2026
  • 0 Comments

2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான சதி வழக்கில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் அமித் ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடந்த கலவரத்தின் பின்னணியில் “பெரிய அளவிலான சதித்திட்டம்” […]

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/ முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை செய்தி

2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நவம்பர் 12 முன்வைப்பு: டிசம்பர் 14 வாக்கெடுப்பு

  • September 30, 2026
  • 0 Comments

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/ முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, […]

உலகம்

ஈரான் போரால் உலகளாவிய பொருளாதாரத்தில் நெருக்கடிநிலை – கத்தார் எச்சரிக்கை

  • September 30, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் இடம்பெறும்போர் ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தைப் பாதித்து, வளைகுடா நாடுகளின் ஏற்றுமதியையும் சீர்குலைத்துள்ளது. இதன் விளைவுகள் எரிசக்தித் துறையைத் தாண்டிப் பல துறைகளையும் பாதித்துள்ளதாக கத்தார் எச்சரித்துள்ளது. அத்துடன் ஈரான் – அமெரிக்கா இடையே தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருவதாகவும் உறுதியளித்துள்ளது. ஈரான் தொடர்பான போர் உலகப் பொருளாதாரத்தின் மீது “தாங்க முடியாத” சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கத்தார் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளியுறவு […]

ஈராக்கில் எஞ்சியிருந்த அமெரிக்கப் படைகள் புதன்கிழமை முழுமையாக வெளியேறிய நிலையில், இதனைத் தங்களின் வெற்றியாகக் கொண்டாடும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC), அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களைத் தோற்கடிக்குமாறு அமெரிக்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் சகாக்களை தோற்கடிக்குமாறு அமெரிக்க வாக்களர்களிடம் ஈரான் கோரிக்கை

  • September 30, 2026
  • 0 Comments

ஈராக்கில் எஞ்சியிருந்த அமெரிக்கப் படைகள் புதன்கிழமை முழுமையாக வெளியேறிய நிலையில், இதனைத் தங்களின் வெற்றியாகக் கொண்டாடும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC), அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களைத் தோற்கடிக்குமாறு அமெரிக்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர கத்தார் தன் மத்தியஸ்தப் பேச்சுகளைத் தொடர்ந்து வருகிறது. எனினும், ஈரான் விரைவில் சரணடையும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் […]

புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கும் இதுவரை எந்தவிதமான பேச்சுகளையும் முன்னெடுக்கவில்லை எனவும், தற்போது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியில் புதிய அரசியலமைப்பு இயற்றப்படுமா?

  • September 30, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கும் இதுவரை எந்தவிதமான பேச்சுகளையும் முன்னெடுக்கவில்லை எனவும், தற்போது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாகவும், புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதாகவும் தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக நாட்டு மக்களுக்கு […]

ஐரோப்பா

ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானம் விபத்து – 06 பேர் உயிரிழப்பு

  • September 30, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் அமூர் பகுதியில் குண்டுவீச்சு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிப் பறப்பின்போது மக்கள் வசிக்காத பகுதியில் அந்த ராணுவ விமானம் விழுந்ததாகவும், அது வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லவில்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அதேநேரம் ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, உக்ரைன்கா விமானத்தளத்திலிருந்து குண்டுவீச்சு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கிராஸ்னோயரோவோ Krasnoyarovo  கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

பிரான்ஸில் தேசிய அளவில் வெடித்தது மாணவர் போராட்டம்

  • September 30, 2026
  • 0 Comments

ரென் மற்றும் பாரிஸில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்து தேசிய அளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கல்விக்கு கூடுதல் பணியாளர்களையும் நிதியையும் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது பாடசாலையின் நுழைவாயிலை மறித்த மாணவர்கள் கூடுதல் வளங்களை கோரியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் பாரிஸில், லைசி சிமோன் வெய்ல் Lycée Simone Weil  பாடசாலை மாணவர்கள், நெரிசலான வகுப்பறைகள் மற்றும் சில பாடசாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் Rennes இல் குப்பைத் தொட்டிகள் எறியூட்டப்பட்டு […]

உலகம்

மொரோக்கோவில் முதல் முறையாக பெண் ஒருவர் பிரதமராக நியமனம்

  • September 30, 2026
  • 0 Comments

மொரோக்கோவில் முதல் முறையாக பெண் ஒருவர் பிரமராக நியமிக்கப்பட்டுள்ளார். மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது, நகர்ப்புறத் திட்டமிடல் துறை அமைச்சரான ஃபாத்திமா ஜஹ்ரா மன்சூரியை Fatima Zahra Mansouri நேற்று பிரதமராக நியமித்துள்ளார். மராகேஷ் நகர மேயராகவும் பதவி வகித்து வந்த மன்சூரியை புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பணித்துள்ளதாக அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இத்தேர்தலில் மன்சூரியின் மையவாதக் கட்சியான ‘அத்தென்டிசிட்டி அண்ட் மாடர்னிட்டி […]