இஸ்ரேலில் மற்றொரு சுற்று தேர்தல் நடைபெற வாய்ப்பு – நெதன்யாகு எதிர்ப்பு
இஸ்ரேலில் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், மற்றொரு சுற்று தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற தனது விருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
85 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி சற்று முன்னிலையில் இருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறவில்லை.
ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவைப்படுகின்ற நிலையில், நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், ஐசென்கோட்டின் எதிர் அணி 48 இடங்களையும் மட்டுமே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவரும், தீவிர வலதுசாரி மற்றும் தீவிர மதப்பற்றுள்ள யூதக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பவருமான நெதன்யாகுவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தும் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டும், தாங்களே அடுத்த அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.




