ஐரோப்பா

பிரான்ஸில் தேசிய அளவில் வெடித்தது மாணவர் போராட்டம்

ரென் மற்றும் பாரிஸில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்து தேசிய அளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கல்விக்கு கூடுதல் பணியாளர்களையும் நிதியையும் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின்போது பாடசாலையின் நுழைவாயிலை மறித்த மாணவர்கள் கூடுதல் வளங்களை கோரியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம் பாரிஸில், லைசி சிமோன் வெய்ல் Lycée Simone Weil  பாடசாலை மாணவர்கள், நெரிசலான வகுப்பறைகள் மற்றும் சில பாடசாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் Rennes இல் குப்பைத் தொட்டிகள் எறியூட்டப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸின் பிற பகுதிகளில் உள்ள மாணவர்களும் இந்த தேசிய அளவிலான போராட்டத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்