உலகம்

ஈரான் போரால் உலகளாவிய பொருளாதாரத்தில் நெருக்கடிநிலை – கத்தார் எச்சரிக்கை

மத்தியக் கிழக்கில் இடம்பெறும்போர் ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தைப் பாதித்து, வளைகுடா நாடுகளின் ஏற்றுமதியையும் சீர்குலைத்துள்ளது.

இதன் விளைவுகள் எரிசக்தித் துறையைத் தாண்டிப் பல துறைகளையும் பாதித்துள்ளதாக கத்தார் எச்சரித்துள்ளது.

அத்துடன் ஈரான் – அமெரிக்கா இடையே தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருவதாகவும் உறுதியளித்துள்ளது.

ஈரான் தொடர்பான போர் உலகப் பொருளாதாரத்தின் மீது “தாங்க முடியாத” சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கத்தார் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மஜித் அல்-அன்சாரி, “எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளின் விளைவுகளை உலகப் பொருளாதாரம் எவ்வளவு காலத்திற்குத் தாங்கிக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

ஒப்பந்தம் தொடர்பில் எழுப்பப்பட்ட  கேள்விக்கு பதிலளித்த அவர், எந்தவொரு ஒப்பந்தத்திலும் தடைகள் இருக்கவே செய்யும். சிரமங்களை முறியடித்து, இரு தரப்பினருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதே எங்கள் பணி; அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.” என்றார்.

மோதல் மேலும் தீவிரமடைந்தால் அது இப்பிராந்தியத்திற்கு இன்னும் அதிக இன்னல்களைக் கொண்டுவரும் என்று  கூறிய அவர்,  ஈரானிடமிருந்து ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், அமைதியான தீர்வைக் காணவே கத்தார் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்