இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி ஆதரவு கரம்

நாட்டிற்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளுடன் நேற்று (28) பிற்பகல்  நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது  வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் தற்போது செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக செயல்படுத்தப்படும் வீட்டு வசதித் திட்டம் மற்றும் சுங்கவரி விலக்கு வசதிகள் உள்ளிட்ட கடன் வசதிகளை வழங்குவதில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் குறித்த துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவு அமைப்பைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது அவர்களின் நலத்திட்டங்களை மேலும் முறையாகவும் திறமையாகவும் செயல்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்