ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் 29 வயதான மிட்பீல்டர் அடித்த கோல், கனடிய கால்பந்து வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. செய்தி விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கனடா

  • June 29, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக் கோப்பையில் கனடா அணி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஸ்டீபன் யுஸ்டாக்கியோ (Stephen Eustaquio) ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் அடித்த அற்புதமான கோல் இதற்கு முக்கிய காரணமாகும். இதன் மூலம், இந்த உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா, தனது வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பையின் ‘ரவுண்ட் ஆஃப் 16’ (சுற்று 16) பகுதிக்குள் நுழைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் 29 […]

உலகம்

ஆப்கானிஸ்தானில் தரைவழித் தாக்குதல்களை தொடங்கியது பாகிஸ்தான் -29 பேர் பலி

  • June 29, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தரைவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது இந்த தாக்குதல்களில் 29  பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் மோதல் போக்கு தற்போது தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்லாமாபாத் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களின் விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். “பக்தியா, பக்திகா மற்றும் குனார் […]

British Defence Secretary Dan Jarvis walks on Downing Street before a cabinet meeting after British Prime Minister Keir Starmer announced a timeline for his resignation, in London, Britain, June 23, 2026 ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

நவீன போர்க்கப்பல்களைக் களமிறக்கும் பிரித்தானியா

  • June 29, 2026
  • 0 Comments

பிரித்தானிய கடற்படையின் பழமையான போர்க்கப்பல்களுக்குப் (Destroyers) பதிலாக, தானியங்கி அமைப்புகளைக் (Uncrewed systems) கட்டுப்படுத்தும் மையங்களாகச் செயல்படக்கூடிய ஆறு பொதுப் போர்க் கப்பல்களை (Common Combat Vessels – CCV) கொள்முதல் செய்ய பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. பிரிட்டிஷ் கடற்படையின் தற்போதைய 6 ‘டைப் 45’ (Type 45) ரக போர்க்கப்பல்கள் 2038 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளன. ஆரம்பத்தில் அவற்றுக்குப் பதிலாக அடுத்த தலைமுறை ‘டைப் 83’ (Type 83) ரக கப்பல்களைக் கொண்டுவரத் […]

இலங்கை செய்தி

நீதிகோரி செம்மணியில் உரிமைப்பந்தம் போராட்டம்

  • June 29, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரையில் 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் […]

ஜூன் 17 அன்று எட்டப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த நீரிணை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாக்குதலை நிறுத்த ஈரான், அமெரிக்கா இணக்கம்

  • June 29, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக நிலவி வரும் மோதல்களை தற்காலிகமாக நிறுத்தவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் நடத்திய தாக்குதல்களால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராது என அஞ்சப்பட்ட நிலையில், இந்த முடிவு அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. “இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) அனைத்து அம்சங்கள் குறித்தும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளன. தற்போதைக்கு இரு நாடுகளும் தங்களது […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 05 நாட்கள் மீட்பு பணியில் 33 பேர் மீட்பு

  • June 28, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட   இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 05 ஆவது நாளாக தொடர்கிறது. தற்போதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர்  மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களில் பெரும்பாலான குழந்தைகளும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நிலநடுக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400 ஐக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலமான கடலோர லா குவைராவில் வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.    

ஐரோப்பா

போர்ச்சுகலில் நிலநடுக்கம்

  • June 28, 2026
  • 0 Comments

போர்ச்சுகலின் சுற்றுலாப் பகுதியான அல்கார்வில் (Algarve) இன்று மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் கடல் மற்றும் வளிமண்டல நிறுவனம் (IPMA) தெரிவித்துள்ளது. இதன் அதிர்வு லாகோஸ் (Lagos) மற்றும் போர்டிமாவோ (Portimao) நகரங்களிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, கேப் செயின்ட் வின்சென்ட்டிலிருந்து (Cape St. Vincent,) சுமார் 70 கி.மீ தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட […]

இலங்கை

கடமை துப்பாக்கி மாயம் – போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

  • June 28, 2026
  • 0 Comments

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம் தொடர்பிலேயே  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்  குறித்த அதிகாரி  நேற்று (27) சீதாவக்கபுர  குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.  அவர்  இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் […]

உலகம்

சவூதி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து – 14 பேர் பலி

  • June 28, 2026
  • 0 Comments

சவூதி எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, ராஸ் தனுராவில் (Ras Tanura) விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்படடுள்ளது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியை, அராம்கோ நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸில் விமான விபத்து – 11 பேர் உயிரிழப்பு

  • June 28, 2026
  • 0 Comments

பிரான்சின் டோம்ப்லைன் (Tomblaine) நகரில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில் நான்சி நகருக்கு அருகே இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் விமானி உள்பட 10 ஸ்கைடைவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் விபத்து குறித்த சாட்சியங்களை சேகரித்து வருகின்றனர். அத்துடன் விபத்து நடந்த பகுதியூடான போக்குவரத்தை தவிர்க்குமாறும் […]