Flydubai விமானத்தின் இந்தியக் கேப்டன் சுமித் மச்சாரைத் தாக்கி, நடுவானில் விமானத்தைக் கீழே மோதி அழிக்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, தான் சாகப் பயப்படவில்லை என்றும் 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தை மோதி அழிப்பதே தனது நோக்கம் என்றும் சவூதி அரேபிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். உலகம் செய்தி

நடுவானில் நடந்த பயங்கரம்: துணை விமானி வழங்கிய பகீர் வாக்குமூலம்

  • October 5, 2026
  • 0 Comments

Flydubai விமானத்தின் இந்தியக் கேப்டன் சுமித் மச்சாரைத் தாக்கி, நடுவானில் விமானத்தைக் கீழே மோதி அழிக்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, தான் சாகப் பயப்படவில்லை என்றும் 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தை மோதி அழிப்பதே தனது நோக்கம் என்றும் சவூதி அரேபிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஹம்மாமி தற்போது ஐக்கிய அரபு அமீரக (UAE) […]

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கான மொத்த செலவினம், 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 61.6 சதவீதம் அதிகரித்து, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் அதிகரிப்பு

  • October 5, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கான மொத்த செலவினம், 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 61.6 சதவீதம் அதிகரித்து, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வெளித்துறைத் தரவுகளின்படி, எரிசக்தி செலவினத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் உயர்வே, நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை கணிசமாக விரிவடைவதற்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4.3 பில்லியன் அமெரிக்க […]

ஐ.எஸ். (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) கவலை வெளியிட்டுள்ளதுடன், அவர்கள் மனிதநேயமற்ற நடத்தையையும் மரண தண்டனையையும் எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈராக் சிறைகளில் 13 ஆஸ்திரேலியர்கள்: மரண தண்டனை அபாயம்

  • October 5, 2026
  • 0 Comments

ஐ.எஸ். (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) கவலை வெளியிட்டுள்ளதுடன், அவர்கள் மனிதநேயமற்ற நடத்தையையும் மரண தண்டனையையும் எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. குறித்த 13 பேரையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருமாறு ஈராக் கோரிக்கை விடுத்தபோதிலும், அவர்களைத் திரும்ப அழைத்துவர எந்த முயற்சியும் எடுக்கப்படாது என்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது. இதன் மூலம் அல்பானீசி (Albanese) அரசாங்கம் தனது […]

நீண்ட தூர ஏவுகணைகளின் சேர்க்கையால் இந்தியாவின் தற்காப்புத் திறன் பெருமளவில் மேம்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடம் தற்போது சுமார் 190 அணுகுண்டுகள் இருக்கக்கூடும் என்றும் ‘புல்லடின் ஆப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ (Bulletin of the Atomic Scientists) அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா செய்தி

இந்தியா வசம் 190 அணு குண்டுகள்: ஆய்வறிக்கையில் தகவல்

  • October 5, 2026
  • 0 Comments

நீண்ட தூர ஏவுகணைகளின் சேர்க்கையால் இந்தியாவின் தற்காப்புத் திறன் பெருமளவில் மேம்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடம் தற்போது சுமார் 190 அணுகுண்டுகள் இருக்கக்கூடும் என்றும் ‘புல்லடின் ஆப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ (Bulletin of the Atomic Scientists) அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அணு ஆயுதங்களை வைத்திருப்பது மட்டுமே ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு போதுமானதல்ல; எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளும் அவசியமாகும். அந்த வகையில், இந்தியா சக்திவாய்ந்த அணுகுண்டுகள் மற்றும் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் எனத் தவறாகக் குறிப்பிட்டதுடன், அமெரிக்காவின் வாக்குப்பதிவு முறையைக் விமர்சித்து பதிவிட்டுள்ளமை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியா உலகம் செய்தி

குழப்பத்தில் ட்ரம்ப்: பிரேசிலை இந்தியாவாக மாற்றி சர்ச்சை

  • October 5, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் எனத் தவறாகக் குறிப்பிட்டதுடன், அமெரிக்காவின் வாக்குப்பதிவு முறையைக் விமர்சித்து பதிவிட்டுள்ளமை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட டிரம்ப், “இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் இன்று 12.5 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே, அதே நாளில் முடிவுகளும் வெளியாகிவிட்டன!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க தேர்தல் முறையை […]

ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நேஜாத் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ராஜினாமா: பின்னணி என்ன?

  • October 5, 2026
  • 0 Comments

ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நேஜாத் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹமீத் போவார்ட் (Hamid Bovard) இடைக்கால அமைச்சராகப் பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒபெக் (OPEC) அமைப்பின் உறுப்பு நாடான ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சராக ஆகஸ்ட் 2024 முதல் பணியாற்றி வந்த மொஹ்சென் பக்நேஜாத், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் […]

“ஈரான் கப்பல்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை விநியோகிக்க வேண்டாம் என அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணியாது: சர்வதேச சட்டத்தின் பிரகாரம் செயற்பாடு

  • October 5, 2026
  • 0 Comments

“ஈரான் கப்பல்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை விநியோகிக்க வேண்டாம் என அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கையானது அழுத்தங்களுக்கு அடிபணியாது, சர்வதேச கடல்சார சட்டங்களின் பிரகாரமே இது விடயத்தில் செயல்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கையின் அமைவிடமென்பது புவிசார் ரீதியிலும் மிக முக்கியமானது. இதனால் பல நாடுகள் இலங்கைக்கு அண்மித்துள்ள சர்வதேச […]

தியாக தீபம் திலீபனின் சிலை நல்லூரில் வைக்கப்பட்டமை மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர். இலங்கை செய்தி

திலீபன் சிலை விவகாரம்: யாழில் நால்வர் விசாரணைக்கு அழைப்பு

  • October 5, 2026
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் சிலை நல்லூரில் வைக்கப்பட்டமை மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர். இதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பொன். மாஸ்டர் மற்றும் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோருக்கும், தியாக தீபம் திலீபனின் காப்பகத்துக்கு நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைக்காக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரனுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நால்வருக்கும் தனித்தனி அழைப்புக் […]

பிரித்தானிய இராணுவத் தளமான RAF Fairford லிருந்து' தனது அனைத்து வெடிகுண்டு வீச்சு விமானங்களையும் (bombers) அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியா விலிருந்து அனைத்து தாக்குதல் விமானங்களையும் மீளப்பெற்றது அமெரிக்கா

  • October 5, 2026
  • 0 Comments

பிரித்தானிய இராணுவத் தளமான RAF Fairford லிருந்து’ தனது அனைத்து வெடிகுண்டு வீச்சு விமானங்களையும் (bombers) அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. அனைத்து வெடிகுண்டு வீச்சு விமானங்களும் அமெரிக்காவில் உள்ள அவற்றின் சொந்த தளங்களுக்குத் திரும்பப் பெறப்பட்டுள்ளதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் திரும்பப் பெறலுக்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வக் காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடந்த செப்டம்பர் 27 அன்று குளொஸ்டர்ஷையரில் (Gloucestershire) உள்ள இந்த விமானத் தளத்திற்கு அருகில் மூன்று சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் குறித்து பொலிஸாருக்குத் […]

ஐரோப்பா

சவுத்தாம்ப்டனில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் – பொலிஸார் பலத்த பாதுகாப்பு

  • October 4, 2026
  • 0 Comments

சவுத்தாம்ப்டன் Southampton  மற்றும் டோவரில் நூற்றுக்கணக்கான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டக்காரர்களும், எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியேற்ற எதிர்ப்பு குழுவான ‘சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ்’  South Coast Patriots  சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் வழியாக பேரணியாக சென்றனர். அதேநேரம் ‘ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்’  Stand Up To Racism  அமைப்பைச் சேர்ந்த சுமார் 50 ஆர்வலர்கள் எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். டோவரில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாம்ப்ஷயர் காவல்துறை மற்றும் […]