திலீபன் சிலை விவகாரம்: யாழில் நால்வர் விசாரணைக்கு அழைப்பு
தியாக தீபம் திலீபனின் சிலை நல்லூரில் வைக்கப்பட்டமை மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
இதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பொன். மாஸ்டர் மற்றும் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோருக்கும், தியாக தீபம் திலீபனின் காப்பகத்துக்கு நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைக்காக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரனுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நால்வருக்கும் தனித்தனி அழைப்புக் கடிதங்கள் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவர்களை இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சமூகமளிக்குமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




