உலகம்

பன்னாட்டு குற்ற அமைப்புகளை ஒடுக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையில் ட்ரம்ப் கையெழுத்து

  • August 13, 2026
  • 0 Comments

தேசிய பாதுகாப்பு  ஆணையொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணையானது அமெரிக்கர்களைத் தாக்குவதற்காக வெளிநாட்டு அதிகார வரம்புகளில் செயல்படும் பன்னாட்டு குற்ற அமைப்புகளுக்கு எதிராக இணையவழி கருவிகளைப் பயன்படுத்த கூட்டாட்சி சட்ட அமலாக்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதல், கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தின் கீழ் இந்த இணையவழி நடவடிக்கைகளை நடத்த உதவுவதற்காக, தனியார் துறையின் திறனையும் புதுமையையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மிரட்டிப் பணம் பறிக்கும் மென்பொருள் தாக்குதல்கள், […]

இந்தியா

லே-லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • August 13, 2026
  • 0 Comments

லே-லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, குறித்த நிலநடுக்கமானது  10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி, லே-லடாக் பகுதியில் 36.881° வட அட்சரேகை மற்றும் 74.402° கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் மற்றும் ஏதேனும் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

இந்தியா

விஜய் மல்லையாவின் வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு

  • August 12, 2026
  • 0 Comments

இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் வழக்கை முடிவுக்கு கொண்டுவர மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015-ல், ஐடிபிஐ வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிடம் இருந்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பெற்ற கடன்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, விஜய் மல்லையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீது கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியது, மோசடி, பணமோசடி மற்றும் அந்தக் கடன்கள் தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து மல்லையா இந்தியாவில் பல சட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

தகவல் தொடர்புகளை ஹேக் செய்ய ஜெர்மனியின் அமைச்சரவை ஒப்புதல்

  • August 12, 2026
  • 0 Comments

சைபர் மற்றும் கலப்பினத் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், தகவல் தொடர்புகளை ஹேக் செய்யவும், வெளிநாட்டு எதிரிகளின் செயல்பாடுகளை சீர்குலைக்கவும் உளவுத்துறைக்கு புதிய அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு ஜெர்மனியின் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்நடவடிக்கையானது வெளிநாட்டு உளவுத்துறையான BND மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு சேவையான BfV ஆகிய இரண்டிற்கும் டிஜிட்டல் தகவல்தொடர்புகளை அணுகவும், தரவுகளைச் சேகரிக்கவும், தாக்குதல்களை முறியடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள […]

உலகம்

வெள்ளை மாளிகை நிர்மாணப் பணிகள் – 900மில்லியன் டொலர் ஒதுக்கீடு

  • August 12, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக ட்ரம்ப் நிர்வாகம் சுமார் 900 மில்லியன் டொலர்களை செலவழிக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸிடமிருந்து நேரடியாகப் பணத்தைப் பெறுவதற்குப் பதிலாக, இந்தப் பணம் மற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

சீனாவின் காந்த மிதப்பு ரயில் – 1 கி.மீற்றர் தூரத்தை 05 வினாடிகளில் கடந்து சாதனை

  • August 12, 2026
  • 0 Comments

சீனாவில் உள்ள காந்த மிதப்பு (மேக்லெவ்) ரயில், தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. 1.1 டன் எடையுள்ள இந்த வாகனம், ஹுபே  (Hubei) மாகாணத்தில் உள்ள 1 கி.மீ நீளமுள்ள சோதனைப் பாதையில், 5.3 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 800 கி.மீ வேகத்தை எட்டியது. மேம்பட்ட பிரேக்கிங் அமைப்பைப் பயன்படுத்தி, சுமார் 200 மீட்டருக்குள் இந்த ரயிலை மென்மையாகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் நிறுத்த முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில், குறுகிய தூர காந்த […]

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்?

  • August 12, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. அதை நாம் தக்க வைத்துக் கொள்வோம் என்று நான் நினைக்கிறேன்! நமது கடற்படை முற்றுகையை அனைவரும் ‘எஃகுச் சுவர்’ என்று அழைக்கிறார்கள், மேலும் அதைப்பற்றி ஈரான் எதுவும் செய்ய முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் ஈரானின் புதிய பாதுகாப்புத் தலைவர் அலி அக்பர் அகமதி ஆகியோருக்கு இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உலகம் செய்தி

ஈரான் பாதுகாப்பு பிரதானியுடன் பாகிஸ்தான் அவசர சந்திப்பு

  • August 12, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் ஈரானின் புதிய பாதுகாப்புத் தலைவர் அலி அக்பர் அகமதி ஆகியோருக்கு இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஈரானின் மஷாத் நகரில் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், பிராந்திய வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அதிகப்படியான ஒற்றுமை நிலவ வேண்டியதன் அவசியத்தை ஈரான் பிரதிநிதி வலியுறுத்தினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரான் மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே காணப்படும் ஆழ்ந்த […]

ஐரோப்பா

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்

  • August 12, 2026
  • 0 Comments

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய ஆளில்லா விமானம்  ஒன்று, எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை அழித்ததாகவும்,  அது மூன்று மணி நேரம் தீப்பிடித்து எரிந்ததாகவும்  மேஜர் ராபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi ) கூறினார். ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புகளைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ரஷ்ய மின்னணுப் போர் கருவிகளை சேதப்படுத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள், ரஷ்ய எல்லைக்குள் ஆழமான தாக்குதல்களை நடத்தும் உக்ரைனின் […]

உலகம்

மரண தண்டனை விவகாரம் – ஈரானுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்த 26 நாடுகள்

  • August 12, 2026
  • 0 Comments

ஈரான் போராட்டக்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியதைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியமும் 26 நாடுகளும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் (Jean-Noel ​Barrot) இன்று இதனை தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில், தன் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிசெய்யவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன. அத்துடன் மரணதண்டனை பயன்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.