சீனாவின் காந்த மிதப்பு ரயில் – 1 கி.மீற்றர் தூரத்தை 05 வினாடிகளில் கடந்து சாதனை
சீனாவில் உள்ள காந்த மிதப்பு (மேக்லெவ்) ரயில், தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
1.1 டன் எடையுள்ள இந்த வாகனம், ஹுபே (Hubei) மாகாணத்தில் உள்ள 1 கி.மீ நீளமுள்ள சோதனைப் பாதையில், 5.3 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 800 கி.மீ வேகத்தை எட்டியது.
மேம்பட்ட பிரேக்கிங் அமைப்பைப் பயன்படுத்தி, சுமார் 200 மீட்டருக்குள் இந்த ரயிலை மென்மையாகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் நிறுத்த முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களில், குறுகிய தூர காந்த மிதப்பு முடுக்கத்திற்கான உலக சாதனையை இதே ரயில் முறியடிப்பது இது மூன்றாவது முறையாகும்.
தற்போது மனிதப் பயணிகளுக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும், இதன் அடிப்படைக் கோட்பாடுகள் காலப்போக்கில் ரொக்கெட்டுகள் மற்றும் போர் விமானங்களுக்கான ஏவுதள அமைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.




