லே-லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
லே-லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, குறித்த நிலநடுக்கமானது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன் மையப்புள்ளி, லே-லடாக் பகுதியில் 36.881° வட அட்சரேகை மற்றும் 74.402° கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரம் மற்றும் ஏதேனும் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.





