மரண தண்டனை விவகாரம் – ஈரானுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்த 26 நாடுகள்
ஈரான் போராட்டக்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியதைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியமும் 26 நாடுகளும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் (Jean-Noel Barrot) இன்று இதனை தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில், தன் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிசெய்யவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
அத்துடன் மரணதண்டனை பயன்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.




