ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்?
ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. அதை நாம் தக்க வைத்துக் கொள்வோம் என்று நான் நினைக்கிறேன்! நமது கடற்படை முற்றுகையை அனைவரும் ‘எஃகுச் சுவர்’ என்று அழைக்கிறார்கள், மேலும் அதைப்பற்றி ஈரான் எதுவும் செய்ய முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.




