ஐரோப்பா

தகவல் தொடர்புகளை ஹேக் செய்ய ஜெர்மனியின் அமைச்சரவை ஒப்புதல்

சைபர் மற்றும் கலப்பினத் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், தகவல் தொடர்புகளை ஹேக் செய்யவும், வெளிநாட்டு எதிரிகளின் செயல்பாடுகளை சீர்குலைக்கவும் உளவுத்துறைக்கு புதிய அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு ஜெர்மனியின் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நடவடிக்கையானது வெளிநாட்டு உளவுத்துறையான BND மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு சேவையான BfV ஆகிய இரண்டிற்கும் டிஜிட்டல் தகவல்தொடர்புகளை அணுகவும், தரவுகளைச் சேகரிக்கவும், தாக்குதல்களை முறியடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட்  (Alexander Dobrindt) செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகள், “ஜெர்மனியின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

“நாங்கள் எங்கள் உளவுத்துறைகளை உண்மையான இரகசிய சேவைகளாக மாற்றி வருகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல் முறையாக இந்த அமைப்புகளுக்கு செயல்பாட்டு அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தரவுகளைச் சேகரிக்க BfV-க்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் இந்த நடவடிக்கைகள், சில குடிசார் உரிமைக் குழுக்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்