உலகம் செய்தி

தைவான் விவகாரம்: ட்ரம்பிடம் சீன ஜனாதிபதி கூறியது என்ன?

  • May 14, 2026
  • 0 Comments

தைவான் விவகாரத்தை முறையாக கையாயாவிட்டால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இதன்போதே சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார் என சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. சீன – அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினை மிக முக்கியமான விடயம் என சுட்டிக்காட்டிய ஜி […]

இலங்கை

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • May 14, 2026
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. இன்று (14) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவுரை, நாளை (15) காலை 8.30 மணி வரை அமலில் இருக்கும். இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து நீடித்து வருவதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் நாட்டில் இருந்து விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு […]

இலங்கை செய்தி

எரிபொருள் இறக்குமதி செலவு 6 மடங்கு அதிகரிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த பெப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதால் பொருளாதாரம் மீது அழுத்தம் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். எண்ணெய் இறக்குமதி செலவு, பெப்ரவரியில் 98 மில்லியன் டொலரிலிருந்து மார்ச்சில் 216 மில்லியன் டொலராகவும், ஏப்ரலில் 368 மில்லியன் டொலராகவும் உயர்ந்துள்ளது. மே மாத இறக்குமதி 522 மில்லியன் டொலரை […]

உலகம் செய்தி

“சிறப்பான சந்திப்பு” – ட்ரம்ப் தெரிவிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் பீஜிங்கில் உள்ள புகழ்பெற்ற சுவர்க்கக் கோவில் Temple of Heaven என்ற இடத்திற்குச் சென்றனர். அங்குதான் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலம், மிங் வம்ச காலத்தில் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டதாகும். மேற்படி சந்திப்பின்போது தைவான் விவகாரம் பற்றி பேசப்பட்டதா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டது. எனினும், அவர் நேரடி பதிலை வழங்கவில்லை. […]

உலகம் செய்தி

BRICS வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் மந்திராலோசனை!

  • May 14, 2026
  • 0 Comments

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்தியாவில் முக்கிய கூட்டமொன்றை நடத்துகின்றனர். மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இக்கூட்டம் நடத்தப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் செல்வாக்கை அதிகரிக்கவும், மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் BRICS அமைப்பு செயல்படுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய […]

ஆஸ்திரேலியா கல்வி

“குடியுரிமை பெறும்வரை உதவித்திட்டங்கள் இல்லை” – எதிரணி தலைவரின் கடும் முன்மொழிவு!

  • May 14, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர், நாட்டின் குடியேற்றக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். முந்தைய ஆண்டில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே புதிய குடியேறிகளை அனுமதிப்பதன் மூலம் வீட்டுவசதி பற்றாக்குறையைக் குறைக்க அவர் இலக்கு வைத்துள்ளார். வெளிநாட்டினர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறும் வரை அவர்களுக்குப் பராமரிப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாட்டையும் அவர் முன்மொழிந்துள்ளார். தற்போதைய லேபர் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கும் டெய்லர், புதிய வீட்டுவசதி உள்கட்டமைப்பு […]

இந்தியா செய்தி

நிச்சயம் வெல்வோம்: வலைத்தளங்களில் வைரலான சீமானின் பேச்சு!

  • May 14, 2026
  • 0 Comments

“இன்று இல்லை என்றால், நாளை நிச்சயம் வெல்வோம்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி உறுப்பினர்களுடன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. சீமான்கூட அவரது தொகுதியில் தோல்வியை எதிர்கொண்டார். இவ்வாறு தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆடியோ தற்போது சமூக […]

உலகம்

ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு! உற்றுநோக்கும் உலகம்!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள், சீனாவில் உள்ள மக்கள் மாபெரும் மண்டபத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியுள்ளன. இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான இந்த முக்கிய சந்திப்பிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் தரப்பில் இருந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ,  பாதுகாப்புத்துறைச் செயலாளர்  பீட் ஹெக்ஸெத், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி  ஜேமிசன் கிரீர், கருவூலத்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட்  ஆகியோர் […]

உலகம்

ஒருபக்கம் போர் : மறுபக்கம் UAEயின் அதிபரை இரகசியமாக சந்தித்த நெதன்யாகு!

  • May 14, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரின் போது, ​​தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு “இரகசியமாகப் பயணம் செய்து” அதன் அதிபரைச் சந்தித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலியப் பிரதமருக்கும் அதிபர் ஷேக் முகமது பின் சயீதுக்கும் ( Sheikh Mohammed bin Zayed) இடையிலான சந்திப்பு ஒரு “வரலாற்றுத் திருப்புமுனைக்கு” வழிவகுத்தது என்று நெதன்யாகுவின் அலுவலகம் கூறியது. இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம், அந்தப் பயணம் குறித்த கூற்றுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” […]

செய்தி விளையாட்டு

வாழ்வா, சவா? மும்பையுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ்!

  • May 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 58 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 13 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத பஞ்சாப் அணி கடைசி 4 ஆட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து தடுமாறி வருகின்றது. இதில் 2 ஆட்டங்களில் 210 ஓட்டங்களுக்கு மேலான இலக்கை […]