“சிறப்பான சந்திப்பு” – ட்ரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் பீஜிங்கில் உள்ள புகழ்பெற்ற சுவர்க்கக் கோவில் Temple of Heaven என்ற இடத்திற்குச் சென்றனர். அங்குதான் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலம், மிங் வம்ச காலத்தில் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டதாகும்.
மேற்படி சந்திப்பின்போது தைவான் விவகாரம் பற்றி பேசப்பட்டதா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டது. எனினும், அவர் நேரடி பதிலை வழங்கவில்லை.
எனினும், சந்திப்பு சிறப்பாக அமைந்தது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.





