அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்த ஆற்றிய பங்களிப்புகளுக்காகத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 85 வயதான நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு (Navanethem Pillay) 2026-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

  • October 9, 2026
  • 0 Comments

அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்த ஆற்றிய பங்களிப்புகளுக்காகத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 85 வயதான நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு (Navanethem Pillay) 2026-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. நவநீதம் பிள்ளை தனது நீண்டகாலப் பணியில் நாடுகள் மற்றும் தேசியத் தலைவர்களைப் பொறுப்புக்கூறச் செய்தவர் என்றும், வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்தவர் என்றும், உறுதியான நெறிமுறைக் கோட்பாட்டை வெளிப்படுத்தியவர் என்றும் நோபல் குழு புகழாரம் சூட்டியுள்ளது. […]

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது.  இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

  • October 9, 2026
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி பிரதி பிரதம கொறடா அஜித் பி. பெரேரா, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரேரணையைக் கையளித்தனர். அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

இலங்கையில் இனங்களுக்கிடையில்நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு 13-வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குமாறு சஜித் வலியுறுத்து

  • October 9, 2026
  • 0 Comments

இலங்கையில் இனங்களுக்கிடையில்நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு 13-வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, வெவ்வேறு இனப் பின்னணியைக் கொண்ட மக்களைப் பெரும்பான்மை அல்லது சிறுபான்மைச் சமூகத்தினர் எனப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக அனைவரையும் சமமாக ‘இலங்கையர்கள்’ என அங்கீகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். “இந்த நாட்டில் வாழும் இனக் குழுக்களைப் பெரும்பான்மைச் சமூகம் என்றும் சிறுபான்மையினர் […]

ஈரானுடனான ஆறு மாதகால போரை முடிவுக்குக் கொண்டுவர பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதியளித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தேர்தல் முடியும்வரை ஈரான்மீது கைவைக்க மாட்டேன்: ட்ரம்ப் உறுதி

  • October 9, 2026
  • 0 Comments

ஈரானுடனான ஆறு மாதகால போரை முடிவுக்குக் கொண்டுவர பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதியளித்துள்ளார். இது குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் நாங்கள் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு […]

வெனிசுலாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு போதுமான அவகாசம் உள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மசாடோ (Maria Corina Machado) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வெனிசுலாவில் 2027 ஜூலைக்குள் ஜனாதிபதி தேர்தல்

  • October 9, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு போதுமான அவகாசம் உள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மசாடோ (Maria Corina Machado) தெரிவித்துள்ளார். வாஷிங்டனின் மேற்பார்வையில் நடைபெறும் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் மரியா கொரினா மசாடோ வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மசாடோ இது குறித்துப் பேசுகையில், “வெனிசுலாவை ஒரு நிலையான ஜனநாயக நாடாக […]

குற்ற கும்பலை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தேடுதல் வேட்டை ஆஸ்திரேலியா உலகம் செய்தி

குற்றக் கும்பலை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தேடுதல் வேட்டை

  • October 9, 2026
  • 0 Comments

பொதுமக்களின் பாதுகாப்பை விடப் பணத்திற்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்படும் Lone Wolf என்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலின் குற்றச் செயல்களை முடக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகளால் ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் சதித்திட்டக் குற்றக் கும்பல்களில், இந்த Lone Wolf மோட்டார் சைக்கிள் கும்பல் மிகவும் ஆபத்தானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் வன்முறைச் சம்பவங்களில் இக்கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வியாழக்கிழமையன்று […]

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் துறவற ஆடை விவகாரத்தில் அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் சரத்துகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது. - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை செய்தி

“ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றம் அரசமைப்பைமீறும் செயல்”

  • October 9, 2026
  • 0 Comments

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் துறவற ஆடை விவகாரத்தில் அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் சரத்துகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது. – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள அவர், நாடு திரும்பிய கையோடு இவ்விவகாரம் தொடர்பில் சட்டப்பூர்வமான காரணங்கள் சகிதம் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளார். இந்நிலையில் ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றப்பட்டு, கைதிக்குரிய ஆடை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் […]

இலங்கை

ரியாத்துக்கான விமான சேவைகள் இரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

  • October 9, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், ரியாத்துக்கான விமான சேவைகளை நாளைய (10) தினம் வரை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், ஹூதி தாக்குதல்கள் காரணமாக உலகளவில் ரியாத்துக்கான 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

களுத்துறையில் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு

  • October 9, 2026
  • 0 Comments

களுத்துறை, நகோடாவில் உள்ள ஓர் உணவகத்தின் உரிமையாளர், இன்று காலை (9) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மனைவி, மேலதிக சிகிச்சைக்காக நகோடா போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவருக்கு […]

உலகம்

நவீனகால தாமஸ் எடிசன் – மஸ்க்கை புகழும் ட்ரம்ப்

  • October 9, 2026
  • 0 Comments

உலக பெரும்பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க், எக்ஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரருமான எலான் மஸ்க்குக்கு ‘நேஷனல் மெடல் ஆப் சைன்ஸ்’ பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. .அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ‘US Institute of Peace’ கல்வி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற “A New Golden Age submmit” நிகழ்வில் இந்த பதக்கங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிவைத்தார். இதன்போது எலான் மஸ்க்கை, ‘நவீனகால தாமஸ் எடிசன்’ என்றும் ‘டைட்டன்’ என்றும் ‘ஜீனியஸ்’ என்றும் ‘தேசிய […]