நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி பிரதி பிரதம கொறடா அஜித் பி. பெரேரா, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரேரணையைக் கையளித்தனர்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.




