இந்தியா செய்தி

டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு

  • July 2, 2026
  • 0 Comments

டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த  அரசாங்கம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை   அறிவித்துள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி, நவம்பர் 1 முதல் பிப்ரவரி 15 வரையான காலப்பகுதியில்  காற்றின் தரம் மோசமடைவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி  தனியார் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்வதற்காக வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை இரட்டிப்பாக்குதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்று நேரங்களில் செயல்படுதல், மற்றும் அத்தியாவசிய பொது உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தவிர மற்ற அனைத்து வெளிப்புற சிவில் கட்டுமானப் பணிகளுக்கும் […]

இலங்கை செய்தி

இலங்கையை வருமானமுள்ள நாடாக தரம் உயர்த்தியது உலக வங்கி

  • July 2, 2026
  • 0 Comments

மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையை, உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உலக வங்கி தரம் உயர்த்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்ததை தொடர்ந்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட தனது அண்மைய வருமான வகைப்பாட்டுப் புதுப்பிப்பில், சிறிலங்காவை கீழ்-நடுத்தர வருமானப் பிரிவிலிருந்து தரமுயர்த்தியுள்ளது. இலங்கையை “மீட்சியின் கதை” என்று விவரித்துள்ள உலக வங்கி, “2022-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற மூன்று […]

"சனிக்கிழமை தொடங்கும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற பக்கத்தை எழுதுமாறு அனைத்து ஈரான் மக்களையும் நான் அழைக்கிறேன்" என்று Ghalibaf வலியுறுத்தியுள்ளார். செய்தி

ஒன்று திரள்வோம் – பலத்தை காட்டுவோம்: ஈரான் மக்களுக்கு அழைப்பு

  • July 2, 2026
  • 0 Comments

மறைந்த உச்ச தலைவர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று ஈரான் சபாநாயகர் Mohammad Bagher Ghalibafஅழைப்பு விடுத்துள்ளார். “சனிக்கிழமை தொடங்கும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற பக்கத்தை எழுதுமாறு அனைத்து ஈரான் மக்களையும் நான் அழைக்கிறேன்” என்று Ghalibaf வலியுறுத்தியுள்ளார். “பழிவாங்கலுக்கான தேசத்தின் குரல் உலகம் முழுவதிலும் உள்ளவர்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க-இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய போரின் […]

ஐரோப்பா

வெப்ப அலை – பிரான்ஸின் இருவேறு பகுதிகளில் காட்டுத்தீ

  • July 2, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை வெப்ப அலை உலுக்கி வரும் நிலையில், பிரான்ஸின் ஆட் (Aude) பகுதியில் இன்று காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் எல்லையருகே உள்ள ஆட் பகுதியின் பெரும் பகுதியை காட்டுத்தீ ஆக்கிரமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கான  சாதகமான சூழ்நிலை இல்லை எனவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே […]

ஐரோப்பா

ரஷ்யாவில் எரிபொருள் பற்றாக்குறை – மக்கள் அதிருப்தி

  • July 2, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் அங்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், விவசாயிகள் உரிய நேரத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் போய்விடுமோ என கவலை வெளியிட்டுள்ளனர். நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருமாறு கெய்வ் மொஸ்கோவை வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவில் எண்ணெய் பற்றாக்குறை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எரிபொருளை […]

இஸ்ரேலிய தாக்குதல்களால் இந்தப் பகுதியின் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பான்மையான நிலப்பரப்பு ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

1000 நாட்கள் கடந்தும் காசாவில் தொடரும் அவலம்

  • July 2, 2026
  • 0 Comments

காசாவில் கடந்த ஆயிரம் நாட்களாகத் தொடரும் போர் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்களால் இந்தப் பகுதியின் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பான்மையான நிலப்பரப்பு ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் 72 ஆயிரத்து 956 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அடங்குவர். ஒரு லட்சத்து 73 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 947 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மிகக் கடுமையான […]

உலகக் கோப்பை இறுதி 32 சுற்று ஆட்டத்தில், 10 வீரர்களுடன் விளையாடிய அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (இறுதி 16) அதிரடியாக முன்னேறியது. செய்தி

24 வருடகால காத்திருப்பு: நிறைவேறியது அமெரிக்காவின் கனவு

  • July 2, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை இறுதி 32 சுற்று ஆட்டத்தில், 10 வீரர்களுடன் விளையாடிய அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (இறுதி 16) அதிரடியாக முன்னேறியது. இதன் மூலம் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கான 24 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பரபரப்பான மற்றும் அதிவேகமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதிப் பகுதியில், அமெரிக்காவின் போலரின் பலோகன் (Folarin Balogun) முதல் கோலை அடித்தார். […]

ஈரானிய ராணுவம் அதிஉயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் (high alert) வைக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உச்ச கட்ட பாதுகாப்பு: ஈரான் படைகள் தயார் நிலையில்

  • July 2, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமெனியின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, ஈரானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. ஈரானிய ராணுவம் அதிஉயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் (high alert) வைக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள உயர்மட்ட அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக ஈரானியப் படைகளின் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் […]

இலங்கைக்கான கொரிய தூதுவர் Miyon Lee, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது கொரியா

  • July 2, 2026
  • 0 Comments

இலங்கைக்கான கொரிய தூதுவர் Miyon Lee, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி மற்றும் பரிமாற்றத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய […]

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. செய்தி பொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ குறித்து மகிழ்ச்சியான செய்தி…

  • July 2, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் தளபதி விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய மாத நடுப்பகுதியில் படம் திரைக்கு வரும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படம் ஆன்லைனில் கசிந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை வரும்காலப்பகுதியில் விஜய் தீவிர […]