உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்த ஆற்றிய பங்களிப்புகளுக்காகத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 85 வயதான நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு (Navanethem Pillay) 2026-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்த ஆற்றிய பங்களிப்புகளுக்காகத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 85 வயதான நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு (Navanethem Pillay) 2026-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

நவநீதம் பிள்ளை தனது நீண்டகாலப் பணியில் நாடுகள் மற்றும் தேசியத் தலைவர்களைப் பொறுப்புக்கூறச் செய்தவர் என்றும், வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்தவர் என்றும், உறுதியான நெறிமுறைக் கோட்பாட்டை வெளிப்படுத்தியவர் என்றும் நோபல் குழு புகழாரம் சூட்டியுள்ளது.

“நெல்சன் மண்டேலா மற்றும் இனவெறிக்கு எதிராகப் போராடியவர்களைத் தனது ஆரம்பக்காலத்தில் பாதுகாத்ததில் தொடங்கி, நமது காலத்தின் முக்கிய சர்வதேச நீதிமன்ற வழக்குகளில் நீதிபதியாகப் பணியாற்றியது வரை அவரது பயணம் ஒரே லட்சியப் பாதையில் பயணித்துள்ளது” என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை புரிந்துள்ளது என முடிவெடுத்த, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் தலைவராகவும் நவி பிள்ளை பணியாற்றினார்.

நவநீதம் பிள்ளை அம்மையார், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவி வகித்த காலத்தில் இலங்கைக்குப் விஜயம் மேற்கொண்டிருந்தார். அனைத்து இலங்கையர்களுக்கும் அவரது பெயர் நன்கு பரிச்சயமானதுடன், இலங்கை அரசியல் களத்திலும் அவர் பெரும் பேசுபொருளாக மாறினார்.

இவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, அவரைத் திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாகச் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையை தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தவர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் இவர் இலங்கைக்கு அரசியல் ரீதியில் எதிரியாகவே ஆட்சியாளர்களால் பார்க்கப்பட்டார்.

நவநீதம் பிள்ளை அம்மையார் தமிழ் வம்வாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி