ஐரோப்பா

புட்டின் – ட்ரம்பிடையே ஒரு மணிநேரம் தொலைபேசி உரையாடல்

  • July 5, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்னிடம் சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரைன் போர்க்களத்தின் உண்மையான நிலவரத்தை புட்டின் விவரித்ததாக தெரியவருகிறது. அத்துடன் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கான அமெரிக்க அதிபரின் திட்டங்களின் பின்னணி உட்பட, உக்ரைன் விவகாரம் குறித்து  விவாதித்தாக கூறப்படுகிறது. உக்ரைனில் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் புட்டின் இதன்போது எடுத்துரைத்துள்ளார். ஆனால் அது ரஷ்யாவின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையுடன் கூடிய புறக்கோள் கண்டுப்பிடிப்பு

  • July 5, 2026
  • 0 Comments

பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கக்கூடிய மற்றொரு தனித்துவமான புறக்கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் “அருகிலுள்ள அண்டைக்கோள்” என்று அழைக்கப்படும் இந்தக் கோளுக்கு GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 25 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வேற்றுக்கிரக உயிர்களைத் தேடும் முயற்சியில் கண்டறியப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய கோள்களில் ஒன்றாக இது காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பூமியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான அளவுள்ள இந்தக் கோள், சூப்பர்-எர்த் வகையைச் சேர்ந்தது. இது சிவப்பு குள்ளன் எனப்படும் […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை கலவரம் – இருவர் பலி: 33 பேர் காயம்

  • July 5, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இவருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர். சிறைக்குள் இன்று பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுவதற்காக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அருகில் உள்ள பொலிஸ்நிலையங்களின் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். கைதிகளின் உறவினர்கள் தற்போது சிறைச்சாலை வளாகத்தில் குவிந்துள்ளனர். அதேவேளை, […]

உலகம்

நான் மூன்றாவது முறையாக பதவியேற்க மாட்டேன் – ட்ரம்ப்‘

  • July 5, 2026
  • 0 Comments

​​அமெரிக்க மக்கள் தங்கள் சுதந்திரத்தை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கர்கள் உலகின் மிகவும் தைரியமான மற்றும் சிறந்த மக்கள். அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் முழுமையான மத சுதந்திரம் உள்ளது என்றும், அமெரிக்கா உலகெங்கிலும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்றும், அமெரிக்காவை ஒருபோதும் தோல்வியடைய விடமாட்டோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். நான் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மீண்டும் வெப்ப அலை ஏற்பட வாய்ப்பு

  • July 5, 2026
  • 0 Comments

அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றொரு வெப்ப அலையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அசோரஸ் தீவுகள் முதல் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் வரை உயர் அழுத்த மண்டலம் உருவாகி வருகிறது. மேலும் வார இறுதிக்குள் பிரான்ஸ் மற்றும் தெற்கு பிரிட்டன் வெப்ப அலையை எதிர்கொள்ளும். வானிலை ஆய்வு மையத்தின்படி, இங்கிலாந்தில் ஜூன் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான மாதமாகவும், ஐக்கிய இராச்சியத்தைப் […]

ஐரோப்பா

இங்கிலாந்து: DWP-யின் புதிய முயற்சி குறித்த வழிகாட்டுதல்

  • July 5, 2026
  • 0 Comments

ஐக்கிய இராச்சியத்தின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை (DWP) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, புதிய சலுகைகளுக்கான தகுதி சரிபார்ப்பு அதிகாரங்களின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படலாம். இங்கிலாந்து அரசாங்கத்தின் நலத்திட்ட அமைப்பில் உள்ள மோசடி மற்றும் தவறுகளுக்கு எதிரான ஒரு பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய முறை கூறப்படுகிறது. மேலும், இது ஆரம்பத்தில் யுனிவர்சல் கிரெடிட், பென்ஷன் கிரெடிட் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு உதவித்தொகை (ESA) கோருபவர்களுக்குப் […]

ஐரோப்பா

UKவில் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் குடியேற்றக் குற்றங்களுக்க எதிராக கடும் நடவடிக்கை – 300க்கும் மேற்பட்டோர் கைது

  • July 5, 2026
  • 0 Comments

சட்டவிரோத வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றக் குற்றங்களுக்கு எதிரான காவல்துறையின் பெரும் நடவடிக்கையின் போது, ​​ஐக்கிய இராச்சியம் முழுவதும் 57 குடியேறிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊடக அறிக்கைகளின்படி, படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழைபவர்கள் மீதான ஒடுக்குமுறையின் போது, ​​பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஜூன் 15 முதல் 20 வரை ஐந்து நாட்கள் நடைபெற்ற நடவடிக்கையின்போது, ​​மொத்தம் பத்து லட்சம் பவுண்டுகளுக்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]

உலகம்

தெஹ்ரானில் கூடியுள்ள மக்களை ஒரே நேரத்தில் தீர்த்துக் கட்ட முடியும் – ட்ரம்ப் இறுமாப்பு

  • July 5, 2026
  • 0 Comments

கமெனியின் இறுதிச் சடங்கின் காட்சிகளுக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஈரானிய உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களைக் கண்டு “அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பில் ஆக்சியோஸிடம் (Axios) பேசிய ட்ரம்ப், தான் அதிர்ச்சியடைந்ததாகவும், மக்கள் அவரை வெறுப்பதாக நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் அழும் காட்சிகளை விவரித்த அவர் ஒருவேளை அது போலிக் கண்ணீராக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். […]

உலகம்

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு

  • July 5, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில்  மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு இன்று  இடம்பெற்று வருகிறது. இதில்  லட்சக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்போது கூட்டத்தின் முன்பு பேசிய கலைஞர் ஒருவர் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கவிஞரான முகமது ரசூலி, “அமெரிக்காவுக்கு மரணம்!” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்!” என்ற கோஷங்களை எழுப்பினார். ட்ரம்பைக் குறிப்பிட்டு பேசிய அவர், “உலகிலேயே மிகவும் கேவலமான மனிதன் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறான்?” என்று கேள்வி எழுப்பினார். […]

ஐரோப்பா

ஹங்கேரி ஜனாதிபதி தாமஸ் ஷுயோக்கை (Tamás Schujók) பதவிநீக்க புதிய வியூகம்

  • July 5, 2026
  • 0 Comments

ஹங்கேரி ஜனாதிபதி தாமஸ் ஷுயோக்கை (Tamás Schujók) பதவியில் இருந்து நீக்க வழிவகை செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்று அந்நாட்டின்  நாடாளுமன்றத்தில்  சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் பீட்டர்  மாக்யார் (Péter Magyar) அரசாங்கம் இந்த சட்டமூலத்தை  நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது. விக்டர் ஓர்பானின் ஆதரவாளராக  ஜனாதிபதி ஷுயோக் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவரை பதவிநீக்கம் செய்வதன் மூலம் ஓர்பானின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர்  மாக்யாருக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த திருத்தம் […]