உலகம்

தெஹ்ரானில் கூடியுள்ள மக்களை ஒரே நேரத்தில் தீர்த்துக் கட்ட முடியும் – ட்ரம்ப் இறுமாப்பு

கமெனியின் இறுதிச் சடங்கின் காட்சிகளுக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஈரானிய உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களைக் கண்டு “அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஆக்சியோஸிடம் (Axios) பேசிய ட்ரம்ப், தான் அதிர்ச்சியடைந்ததாகவும், மக்கள் அவரை வெறுப்பதாக நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் அழும் காட்சிகளை விவரித்த அவர் ஒருவேளை அது போலிக் கண்ணீராக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நாம் நினைத்தால் அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தீர்துக்கட்டலாம். ஆனால் நாம் அதை செய்யப்போவதில்லை. பின்னர் பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்கமாட்டார்கள்” என ஏளனமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் ட்ரம்பின் இந்த கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்த ஆர்மீனியாவில் உள்ள ஈரானிய தூதரகம், மக்களைக் கொல்லலாம், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது. நீங்கள் அயதுல்லா கமெனியைக் கொன்றீர்கள், ஆனால் உண்மையில், நீங்கள் ஒரு வாசனைத் திரவியக் குப்பியை உடைத்தீர்கள், அதன் மணம் எல்லா இடங்களிலும் பரவியது.” எனத் தெரிவித்துள்ளது.

“உங்களுக்கு நாகரிகமோ, வரலாறோ, மரியாதையோ இல்லாததால் இந்த விஷயங்கள் உங்களுக்குப் புரியவில்லை,” என்றும்  ஈரானிய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்